மதுரை : மதுரை தபால் கோட்டத்தில் தபால் ஆயுள் காப்பீடு, கிராமிய தபால் ஆயுள் காப்பீடு முகவர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 முதல் 50 வயதிற்குட்பட்ட வேலையில்லாத இளைஞர்கள், சுய வேலையில் உள்ளவர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், இன்சூரன்ஸ் கம்பெனி முன்னாள் முகவர்கள், சுய உதவி குழுவினர் விண்ணப்பிக்கலாம். நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவோருக்கு நிலையான சம்பளம் கிடையாது. பாலிசி பிரிமியம் அடிப்படையில் கமிஷன் வழங்கப்படும்.
இதற்கான விண்ணப்பங்களை அருகிலுள்ள தபால் அலுவலகங்களில் பெற்று பான்கார்டு, ஆதார் கார்டு, முகவரி சான்று போன்ற சான்றுகளுடன் டிச., 31க்குள் முதுநிலை தபால் கண்காணிப்பாளர், மதுரை கோட்டம்,மதுரை - 625 002 முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு ராம்குமார் பாபாவை 98942 62811ல் தொடர்பு கொள்ளலாம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE