மதுரை : மதுரையில் கொரோனா ஊரடங்கு தளர்விக்கு பின் இன்று (டிச., 16)முதல் திருமலை நாயக்கர் மகால் மற்றும் உலக தமிழ் சங்க வளாக கீழடி கண்காட்சி மக்கள் பார்வைக்காக திறக்கப்படுகிறது.
தொல்லியல் துணை இயக்குனர் சிவானந்தம் கூறியதாவது: மகால் வழக்கம் போல் காலை 9:00 - மாலை 5:00 மணி வரை திறந்திருக்கும். மாலை 6:30 மணிக்கு ஒளி, ஒலி காட்சிகள் நடக்கும்.உலக தமிழ் சங்க கீழடி கண்காட்சி காலை 11:00 - மாலை 5:00 மணி வரை திறந்திருக்கும். மகால், கண்காட்சியை பார்வையிட வருவோர் அவசியம் முககவசம் அணிய வேண்டும். கிருமி நாசினி மூலம் கைகளை சுத்தம் செய்த பின் சமூக இடைவெளியை பின்பற்றி பார்வையிட வேண்டும், என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE