அரசியல் செய்தி

தமிழ்நாடு

'மதுரை எய்ம்ஸ் நிலத்தை இன்னும் மாநில அரசு தரவில்லை'

Added : டிச 16, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
மதுரை : 'மதுரை எய்ம்ஸ்கான நிலத்தை இன்னும் மாநில அரசு ஒப்படைக்கவில்லை' என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மதுரை தோப்பூரில் ரூ.1264 கோடியில் அமையும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 2019 ஜன.,ல் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இதற்கான நிதியை ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை (ஜிக்கா) கடனாக வழங்குகிறது.2022 செப்.,ல் பணிகள் முடிக்கப்படும் என முதலில் உத்தரவாதம் தரப்பட்டது. ஆனால் இதுவரை

மதுரை : 'மதுரை எய்ம்ஸ்கான நிலத்தை இன்னும் மாநில அரசு ஒப்படைக்கவில்லை' என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மதுரை தோப்பூரில் ரூ.1264 கோடியில் அமையும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 2019 ஜன.,ல் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இதற்கான நிதியை ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை (ஜிக்கா) கடனாக வழங்குகிறது.2022 செப்.,ல் பணிகள் முடிக்கப்படும் என முதலில் உத்தரவாதம் தரப்பட்டது. ஆனால் இதுவரை ஜிக்காவிடம் இருந்து நிதியே கிடைக்கவில்லை. சுற்றுச்சுவர் மட்டும் கட்டப்படுகிறது. இந்தாண்டு துவக்கத்தில் முதற்கட்ட திட்ட அறிக்கையை மத்திய, மாநில அரசுகள் தயாரித்து ஜிக்காவிடம் சமர்ப்பித்தன.

ஜிக்கா குழு தோப்பூரில் ஆய்வு மேற்கொண்டது. அதன் பிறகு எவ்வித முன்னேற்றமும் இல்லை. இதற்கிடையே தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தை சேர்ந்த சமூகஆர்வலர் பாண்டியராஜா தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் எழுப்பிய கேள்விகளுக்கு ஆகஸ்ட்டில் பதிலளித்த மத்திய அரசு, 'மதுரை எய்ம்ஸ்காக இந்தியா, ஜப்பான் இடையே டிசம்பரில் கடன் ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்புள்ளது. அடுத்த 45 மாதங்களில் பணி நிறைவு பெறும்' என தெரிவித்தது.எப்போது வரும் எய்ம்ஸ்பிறகு மீண்டும் மதுரை எய்ம்ஸ் தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பல்வேறு விவரங்களை அவர் கோரினார்.

நேற்று பதிலளித்த மத்திய அரசு, 'ரூ.1264 கோடியில் அமையும் மதுரை எய்ம்ஸ்க்கு கடன் பெறும் நடவடிக்கை இன்னும் முடியவில்லை. ஒப்பந்தம் கையெழுத்தானால் தான் கடன் விவரம் தெரிவிக்கப்படும். கடன் கிடைத்த பிறகு தான் கட்டுமான பணி துவங்கும். இன்றைய நிலவரப்படி எய்ம்ஸ்க்கான நிலத்தை மத்திய அரசிடம் மாநில அரசு ஒப்படைக்கவில்லை' என தெரிவிக்கப்பட்டுள்ளது.பாண்டியராஜா கூறுகையில், 'முதலில் டிச.,ல் கடன் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என தெரிவித்த மத்திய அரசு இம்முறை அது பற்றி எந்த உத்தரவாதமும் தரவில்லை. இதனால் எப்போது கடன் கிடைக்கும், எப்போது கட்டுமான பணி துவங்கும் என்பது தெரியவில்லை. மத்திய, மாநில அரசுகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.

தெளிவான பதில் இல்லை : தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் எய்ம்ஸ் பற்றி விவரம் கோரிய பாண்டியராஜா, கட்டுமான பணி துவங்கும், முடியும் மாதம், ஜிக்கா கடன் திட்டத்தின் தற்போதைய நிலை, மருத்துவ, நர்ஸிங் படிப்பு எப்போது துவங்கும், எய்ம்ஸ்க்கு மத்திய, மாநில அரசுகள் சார்பில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனரா, எய்ம்ஸ் மாதிரி வரைபடம் கிடைக்குமா என்பன உள்ளிட்ட 17 கேள்விகளை கேட்டிருந்தார். இவற்றை முற்றாக ஒதுக்கிவிட்டு சில கேள்விகளுக்கு மட்டும் முழுமையற்ற பதிலை மத்திய அரசு அளித்துள்ளது. எனவே எய்ம்ஸ் கட்டுமான பணி எப்போது துவங்கும் என்பதில் மர்மம் தொடர்கிறது. இதுவரை நிதியே கிடைக்காதது தமிழக மக்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
16-டிச-202007:28:35 IST Report Abuse
ஆப்பு அடப் போங்கடா... கட்டுறதே ஜப்பானிடம் கட்ன் வாங்கி. இதிலே இவிங்க நிலம் தரவில்லை. அவன் தண்ணுர் தர வில்லைன்னு. ரெண்டு பேரும் சேர்ந்துதானே அடிக்கல் நாட்டுனீங்க?நாலு வருசம் ஆச்சு. போஸ்டர் அடுச்சு எங்கே எய்ம்ஸ் நு கேக்குறாங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X