மோடி, அமித் ஷாவிடம் ரூ.750 கோடி இழப்பீடு கோரிய மனு தள்ளுபடி

Updated : டிச 16, 2020 | Added : டிச 16, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
வாஷிங்டன்: பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோரிடம், 750 கோடி ரூபாய் இழப்பீடு கோரி தொடரப்பட்ட மனுவை, அமெரிக்க நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை, கடந்தாண்டு மத்திய அரசு ரத்து செய்தது. அத்துடன், காஷ்மீர், லடாக் என, இரு யூனியன் பிரதேசங்கள், பார்லிமென்ட் ஒப்புதலுடன் உருவாக்கப்பட்டன. இதை எதிர்த்து,
PM Modi, Amit Shah, case, US court, dismisses

வாஷிங்டன்: பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோரிடம், 750 கோடி ரூபாய் இழப்பீடு கோரி தொடரப்பட்ட மனுவை, அமெரிக்க நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை, கடந்தாண்டு மத்திய அரசு ரத்து செய்தது. அத்துடன், காஷ்மீர், லடாக் என, இரு யூனியன் பிரதேசங்கள், பார்லிமென்ட் ஒப்புதலுடன் உருவாக்கப்பட்டன. இதை எதிர்த்து, அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாண மாவட்ட நீதிமன்றத்தில், 'காஷ்மீர் காலிஸ்தான் ஓட்டெடுப்பு முன்னணி' என்ற பிரிவினை வாத அமைப்பு, மனு தாக்கல் செய்தது.


latest tamil news


இதே போல, டி.எப்.கே., மற்றும் எஸ்.எம்.எஸ்., என்ற இரு பெயர்களில், மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்களில், 'மோடி, அமித் ஷா, ராணுவ அதிகாரி கன்வல் ஜீத் சிங் தில்லான் ஆகியோர், 750 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்' என, கோரப்பட்டிருந்தது. கடந்த ஆண்டு, ஹூஸ்டன் நகரில் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகியோரின், 'ஹவ்டி மோடி' நிகழ்ச்சி நடப்பதற்கு சில தினங்களுக்கு முன், இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்நிலையில், இந்த மனுக்கள் இருமுறை, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக விசாரணைக்கு வந்த போது, மனுதாரர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதை சுட்டிக் காட்டி, நீதிபதி ஆண்ட்ரூ ஹேனன், மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RAVINDRAN - CHENNAI,இந்தியா
16-டிச-202016:01:33 IST Report Abuse
RAVINDRAN இது என்ன கிறுக்குத்தனமான இருக்கு.இந்தியா வுக்குள் நடப்பதற்கு இந்த தேச விரோதிகள் அமெரிக்கா கோர்ட்டில் மனு.அதையும் வெக்கமே இல்லாம விஜயனை.இதை விட கேவலம் அமெரிக்கா நீதிமன்றத்துக்கு வேண்டாம்.
Rate this:
Cancel
Ramalingam Shanmugam - mysore,இந்தியா
16-டிச-202010:34:45 IST Report Abuse
Ramalingam Shanmugam விற்ற பப்பு குடும்பத்தை விட்டு விட்டு ?
Rate this:
Cancel
Madhusoodhana Ramachandran - Chennai,இந்தியா
16-டிச-202009:52:48 IST Report Abuse
Madhusoodhana Ramachandran காலிஸ்தான் என்ற பெயரில் காலி பயலுக அட்டகாசம். அதே மாதிரி விவசாயிகள் போராட்டம் என்று சொல்லி நாடு மாறி கம்யூனிஸ்ட்டுகள் வெவரம் தேரியாதவர்களையும் அப்பாவிகளையும் இந்த கேப்மாரி கும்பல் நடுவில் புகுந்து நாட்டினை பிளவுபடுத்த முயற்சிக்கிறது. முன்பு பல போராட்டங்களிலும் இத்தகைய கேப் மாறி கும்பல் தான் குழப்பம் செய்து குளிர் காய்ந்து கொண்டிருந்தது. ஜவஹர் லால் யூனிவர்சிட்டி போராட்டத்திலும் இந்த தீவிரவாதி கும்பல் குளிர்காய்ந்தது. பிற்பாடு சாயம் வெளுத்தது. இத்தகைய மோசடி கும்பலை கண்காணித்து உள்ளே தூக்கி போட்டு ஆர்ம்மி இடம் ஒப்படைக்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X