சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஒற்றை கொம்பன் யானையை பிடிக்க தீவிரம்: கும்கிகள், 'ட்ரோன்' உதவியுடன் தேடுதல்

Added : டிச 16, 2020
Share
Advertisement
பந்தலுார்: பந்தலுார் அருகே, மூவரை கொன்ற ஒற்றை கொம்பன் யானையை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.நீலகிரி மாவட்டம், பந்தலுார் அருகே, சேரம்பாடி கண்ணம்வயல் பகுதியில் கடந்த, 11ம் தேதி நாகமுத்து என்பவரையும், 14-ம் தேதி ஆனந்தராஜ், அவரது மகன் பிரசாந்த் ஆகியோரையும் ஒற்றை கொம்பன் யானை தாக்கி கொன்றது. அதிர்ச்சியடைந்த மக்கள் சாலை மறியலில்
 ஒற்றை கொம்பன் யானையை பிடிக்க தீவிரம்:  கும்கிகள், 'ட்ரோன்' உதவியுடன் தேடுதல்


பந்தலுார்: பந்தலுார் அருகே, மூவரை கொன்ற ஒற்றை கொம்பன் யானையை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

நீலகிரி மாவட்டம், பந்தலுார் அருகே, சேரம்பாடி கண்ணம்வயல் பகுதியில் கடந்த, 11ம் தேதி நாகமுத்து என்பவரையும், 14-ம் தேதி ஆனந்தராஜ், அவரது மகன் பிரசாந்த் ஆகியோரையும் ஒற்றை கொம்பன் யானை தாக்கி கொன்றது. அதிர்ச்சியடைந்த மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.டாப்சிலிப் மற்றும் முதுமலையில் இருந்து கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு, யானையை தேடும் பணி நேற்று துவக்கப்பட்டது. இரண்டு 'ட்ரோன்' கேமராக்கள் பயன்படுத்தி யானை நடமாட்டம் குறித்தும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் அன்வர்தீன் மேற்பார்வையில், நான்கு குழுக்கள் அமைக்கப்பட்டு, வனப்பகுதிகளில் தேடும் பணி நடக்கிறது.

வனப்பாதுகாவலர் அன்வர்தீன் கூறுகையில்,''ஒற்றை கொம்பன் யானையை தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். விரைவில் யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்து, முதுமலை கொண்டு செல்லப்படும். யானையை பார்த்தால் மக்கள் உடனே தகவல் தெரிவிக்க வேண்டும்,'' என்றார்.


யானை தாக்கி பெண் பலி

நீலகிரி மாவட்டம், மசினகுடி ஆனைகட்டி பழங்குடி கிராமத்தை சேர்ந்தவர் சரசு, 65. இவர் வேறு இருவருடன் நேற்று, முதுமலை புலிகள் காப்பகம், சீகூர் வனச்சரகம், மன்னாத்திகொம்பை வனப்பகுதியில் கால்நடைகளுக்கு புற்கள் சேகரித்து எடுத்து வர சென்றனர். அப்போது, குட்டியுடன் வந்த பெண் காட்டு யானை சரசுவை துரத்தி வந்து தாக்கியது. படுகாயம் அடைந்த சரசு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடன் சென்ற இருவரும், ஓடி உயிர் தப்பினர். சீகூர் வனச்சரகர் முரளி மற்றும் வன ஊழியர்கள், தேனாடுகம்பை போலீசார், உடலை மீட்டு, ஊட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X