சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆக்கிரமிப்பு கட்டடம் இடிப்பு கிடைத்தது சாலை வசதி

Added : டிச 16, 2020
Share
Advertisement
அம்பத்துார் :சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கட்டடம், நீதிமன்ற உத்தரவால், மாநகராட்சி மூலம் தரைமட்டமானது.சென்னை, அம்பத்துார் மண்டலம், 93வது வார்டு, முகப்பேர், கோல்டன் ஜார்ஜ் நகர், ஈரோடு ஜெகன்னாதன் தெருவைச் சேர்ந்தவர் எபிநேசர் இன்பராஜ். அவர், மேற்கண்ட இடத்தில், 2007ம் ஆண்டு சாலையை ஆக்கிரமித்து, 1,980 சதுர அடியில், தரை மற்றும் முதல் தளம் கொண்ட வீடு கட்டி இருந்தார்.இது

அம்பத்துார் :சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கட்டடம், நீதிமன்ற உத்தரவால், மாநகராட்சி மூலம் தரைமட்டமானது.சென்னை, அம்பத்துார் மண்டலம், 93வது வார்டு, முகப்பேர், கோல்டன் ஜார்ஜ் நகர், ஈரோடு ஜெகன்னாதன் தெருவைச் சேர்ந்தவர் எபிநேசர் இன்பராஜ். அவர், மேற்கண்ட இடத்தில், 2007ம் ஆண்டு சாலையை ஆக்கிரமித்து, 1,980 சதுர அடியில், தரை மற்றும் முதல் தளம் கொண்ட வீடு கட்டி இருந்தார்.இது குறித்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், பொது நல வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து, 2017 மற்றும், 2018ம் ஆண்டு, கட்டட உரிமையாளருக்கு, நகரமைப்பு சட்டப்படி, மாநகராட்சி மூலம், 'நோட்டீஸ்' வழங்கப்பட்டது. அடுத்த நடவடிக்கையாக, கடந்த மாதம்,அந்த கட்டடத்திற்கு, 'சீல்' வைக்கப்பட்டது. நீதிமன்ற உத்தரவுப்படி, நேற்று காலை, ஆக்கிரமிப்பு கட்டடம், முழுமையாக இடித்து அகற்றப்பட்டு, பொதுமக்களின், சாலை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. அதன் மூலம், மாநகராட்சி, 1.5 கோடி ரூபாய் மதிப்புள்ள, அரசு நிலத்தை மீட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X