சென்னை:'நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச கூலி வழங்க வேண்டும்' என, 30க்கும் மேற்பட்ட, சென்னை குடிநீர் வாரிய ஊழியர்கள், கலெக்டர் சீதாலட்சுமியிடம் முறையிட்டனர்.சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தில், அனைத்து மண்டலங்களிலும், ஒப்பந்த அடைப்படியில், ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். அவர்களுக்கு, கலெக்டர் நிர்ணயித்த, குறைந்தபட்ச தினக்கூலியை, 445 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என, அனைத்து மண்டல அதிகாரிகளுக்கும், கடந்த ஜூனில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.ஆனால், வாரியத்தில், 140 ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது. இதுதொடர்பாக, சென்னையில் அனைத்து மண்டலங்களில் பணியாற்றும், 30க்கும் மேற்பட்ட கழிவுநீரகற்று ஊழியர்கள், கலெக்டர் சீதாலட்சுமியை, நேரில் சந்தித்து முறையிட்டனர்.இது குறித்து, ஊழியர்கள் கூறியதாவது:அனைத்து மண்டலங்களிலும், கழிவுநீர் குழாய் அடைப்பு நீக்குதல், குடிநீர் குழாய் சீரமைத்தல் மற்றும் புதிய இணைப்பு வழங்குவது உள்ளிட்ட பணிகளில், களப்பணியாளர்களாக, ஆறு ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றுகிறோம்.எங்களுக்கு, குறைந்தபட்ச ஊதியம் வழங்க அறிவுறுத்தியும், வழங்கப்படாமல் இருப்பது, முறைகேடு நடப்பதாக தெரிகிறது. இதை கலெக்டர் கண்காணித்து, நடவடிக்கை எடுக்க வேண்டி, மனு அளித்துள்ளோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE