பொது செய்தி

இந்தியா

விவசாயிகள் போராட்டத்தால் நாளுக்கு ரூ.3,500 கோடி இழப்பு

Added : டிச 16, 2020 | கருத்துகள் (11)
Share
Advertisement
புதுடில்லி: விவசாயிகள் போராட்டத்தால், நாள் ஒன்றுக்கு, 3,500 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாக, இந்திய வர்த்தக, தொழிலக கூட்டமைப்பான, 'அசோசெம்' தெரிவித்துள்ளது. இதையடுத்து, புதிய வேளாண் சட்டம் குறித்து, அரசும் விவசாயிகளும் விரைந்து, ஒரு முடிவுக்கு வர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.மேலும் தெரிவித்துஉள்ளதாவது:விவசாயிகள் போராட்டத்தால், பஞ்சாப், ஹரியானா, ஹிமாச்சல்
விவசாயிகள்போராட்டம், நஷ்டம், தொழில்துறை, வேளாண்சட்டம்,

புதுடில்லி: விவசாயிகள் போராட்டத்தால், நாள் ஒன்றுக்கு, 3,500 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாக, இந்திய வர்த்தக, தொழிலக கூட்டமைப்பான, 'அசோசெம்' தெரிவித்துள்ளது. இதையடுத்து, புதிய வேளாண் சட்டம் குறித்து, அரசும் விவசாயிகளும் விரைந்து, ஒரு முடிவுக்கு வர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும் தெரிவித்துஉள்ளதாவது:விவசாயிகள் போராட்டத்தால், பஞ்சாப், ஹரியானா, ஹிமாச்சல் பிரதேசம், ஜம்மு - காஷ்மீர் ஆகிய மாநிலங்களில், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, பொருட்களை எடுத்துச் செல்வது தடைபடுவதால், நாட்டின் பொருளாதாரத்தில், நாள் ஒன்றுக்கு, 3,500 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. ஜவுளி, வாகன பாகங்கள், சைக்கிள்கள், விளையாட்டு பொருட்கள் போன்ற துறையினர், ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ளனர்.


latest tamil news



கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி, வெளிநாடுகளுக்கு உரிய நேரத்தில் ஏற்றுமதி செய்ய முடியாமல் போகிறது. இதனால், நம் தொழில்துறையின் மீதான நற்பெயருக்கும் பங்கம் ஏற்படுகிறது.ெஇவ்வாறு தெரிவித்து உள்ளது.

அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பும், கடந்த, 20 நாட்களில் போராட்டம் காரணமாக, டில்லி மற்றும் அருகில் உள்ள மாநிலங்களில், 5,000 கோடி ரூபாய் அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளது.மேலும், டில்லிக்கு செல்லும் பொருட்களில், 30 - 40 சதவீத பொருட்கள் போய் சேரமுடியாமல், பாதிப்பு ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Baliah Seer - Chennai,இந்தியா
16-டிச-202021:04:19 IST Report Abuse
S.Baliah Seer போராட்டங்கள் நடத்தினால் ஒரு நாளைக்கு இத்தனை கோடி, அத்தனை கோடி நஷ்டம் என்கிறீர்கள். கொரோனா பெயரைச் சொல்லி 6 -மாதங்களுக்கு மேல் பூட்டு போட்டீர்களே அப்போ நஷ்டமே இல்லையா? ஏன் இந்த பொய்யுரை?
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
16-டிச-202016:40:28 IST Report Abuse
Endrum Indian இந்த நஷ்டத்தை இந்த போராட்ட தரகர் கூட்டம் தான் தரவேண்டும் என்று அவர்களிடம் வசூல் செய்யுங்கள் பிஸ்ஸா மசாஜ் எல்லாம் கிடைக்கின்றது அல்லவா இந்த கூட்டத்தில் அப்போ இந்த பணத்தையும் அவர்கள் தான் கொடுக்கவேண்டும் என்று சட்டமிடுங்க மறு வினாடியே இந்த கூட்டம் காணாமல் போய் விடும். அந்த மூன்று சட்டமும் இடை தரகர்களுக்கு எதிரான சட்டம் ஆகவே தான் அவர்கள் செய்கின்றர்கள் இந்த போராட்டம் விவசாயிகள் அல்லவே அல்ல இவர்கள்
Rate this:
Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
16-டிச-202019:36:48 IST Report Abuse
Mirthika Sathiamoorthiஹஹஹஹ....காசு கொடுக்கணும்ன்னு சட்டம்போட்ட ஓடிடுவாங்களா? வேளாண்சட்டதோடு இதையும் நீக்க சொல்லி இன்னும் தீவிரமா போராடுவாங்க...இவளவு நடந்ததுக்கப்புறமும்...ஹஹஹஹஹ அதுஎல்லாம் சரி போராட்டக்காரர்களின் கோரிக்கையை ஏற்காமல் போராட்டத்தை வளரவிட்டு நஷ்டம் ஏற்படுத்தின ஆளும் கட்சியை என்ன செய்யலாம்?...
Rate this:
Cancel
SRINIVASAN - Abu Dhabi,இந்தியா
16-டிச-202015:13:03 IST Report Abuse
SRINIVASAN மத்திய அரசு ஏன் சட்டங்களை திரும்ப பெற்று விவாதத்துடன் பாராளும்மன்றத்தில் நிறைவேற்றலாமே அக்கறை நாட்டின் மேல் இருந்தால்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X