சென்னை:துபாயிலிருந்து கடத்தி வரப்பட்ட, 63.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க கட்டிகளை, சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளில் ஒன்றான துபாய் நகரிலிருந்து, 'ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்' விமானம் நேற்று நள்ளிரவு, 1:35 மணிக்கு, சென்னை வந்தது.அதில் வந்த, சென்னை, ராமநாதபுரத்தைச் சேர்ந்த, எட்டு பயணியரை, சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அதில், அவர்களது உடைகள் மற்றும் ஆசனவாய்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த, 63.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 1.26 கிலோ கிராம் தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.தங்கம் கடத்தலில் ஈடுபட்டவர்களை சுங்கத்துறையினர் கைது செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE