பொது செய்தி

தமிழ்நாடு

ராமையா தெருவா... அப்படி ஒண்ணு இல்லையே!

Added : டிச 16, 2020
Share
Advertisement
கோடம்பாக்கம்:மேற்கு மாம்பலத்தில், 2013ல் மாநகராட்சி கட்டட அனுமதி வழங்கிய தெரு, தற்போது, வரைப்படத்திலேயே இல்லை என, அதிகாரிகள் கூறுவதால், பகுதி மக்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். சென்னை மாநகராட்சி, கோடம்பாக்கம் மண்டலம், மேற்கு மாம்பலம், 141வது வார்டில், வடிவேல் புரம், ராமையா தெரு உள்ளது.கழிவு நீர் இணைப்புஆங்கில எழுத்தின், 'எல்' வடிவில் உள்ள இந்த தெருவில், 25க்கும் மேற்பட்ட
 ராமையா தெருவா... அப்படி ஒண்ணு இல்லையே!

கோடம்பாக்கம்:மேற்கு மாம்பலத்தில், 2013ல் மாநகராட்சி கட்டட அனுமதி வழங்கிய தெரு, தற்போது, வரைப்படத்திலேயே இல்லை என, அதிகாரிகள் கூறுவதால், பகுதி மக்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். சென்னை மாநகராட்சி, கோடம்பாக்கம் மண்டலம், மேற்கு மாம்பலம், 141வது வார்டில், வடிவேல் புரம், ராமையா தெரு உள்ளது.கழிவு நீர் இணைப்புஆங்கில எழுத்தின், 'எல்' வடிவில் உள்ள இந்த தெருவில், 25க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.இதில், ஒன்பது வீடுகள், வாழை தோப்பு குடிசை மாற்று வாரிய குடியிருப்பின் பின்புறம் உள்ளது. 20 அடி அகலம் உடைய ராமையா தெரு, தற்போது, ஆக்கிர மிப்பாளர்கள் பிடியில் சிக்கி, 5 அடியாக சுருங்கி விட்டது.இதனால், குடிசை மாற்று வாரிய குடியிருப்பின் பின்புறம் உள்ள, ஒன்பது வீடுகளுக்கு, வாகனம் செல்ல முடியாத நிலையில் ஏற்பட்டது.இதையடுத்து, குடிசை மாற்று வாரிய குடியிருப்பு சாலையை, இப்பகுதி மக்கள் பயன்படுத்தி வந்தனர். தற்போது, குடிசை மாற்று வாரியம், அந்த குடியிருப்பை இடித்து, புது கட்டடம் கட்டுகிறது. இதனால், இவர்களுக்கு இருந்த ஒரு வழியும் அடைக்கப்பட்டது.இச்சாலை வழியாக தான், இந்த ஒன்பது வீடுகளுக்கும், குடிநீர் மற்றும் கழிவு நீர் இணைப்பு வழங்கப்பட்டு வந்தது. தற்போது, அவையும் துண்டிக்கப்பட்டுள்ளன. இப்பகுதியில், குப்பை எடுக்கவும் மாநகராட்சி ஊழியர்கள் வருவதில்லை.மேலும், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசர வாகனங்கள் கூட, வழியில்லாமல், இப்பகுதியினர் விழிபிதுங்கி நிற்கின்றனர். இது குறித்து, அப்பகுதி மக்கள் மாநகராட்சியில் புகார் அளித்தபோது, 'ராமையா தெரு என, ஒரு தெரு மாநகராட்சி வார்டு வரைப்படத்திலேயே இல்லை' என, அதிகாரிகள் பதில் அளித்துள்ளனர்.அதிர்ச்சிஆனால், அங்கு வசிப்போருக்கு, 'ஆதார் அட்டை உள்ளிட்ட சான்றுகளில், ராமையா தெரு என, குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும், ராமையா தெருவில், குடிசைமாற்று வாரிய குடியிருப்பின் பின்புறம் உள்ள அடுக்குமாடி குடியிருப்பிற்கு, ராமையா தெரு, 23 அடி அகல சாலை எனக் கூறி, 2013ல், மாநகராட்சி கட்டட அனுமதி வழங்கியுள்ளது.மாநகராட்சியே, கட்டட அனுமதி வழங்கிய தெரு, ஏழே ஆண்டுகளில், வரைப்படத்தில் இருந்தே மாயமாகியுள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இது குறித்து, மாநகராட்சி கமிஷனர், முதல்வர் என, புகார் அளித்தும், எந்த பயனும் இல்லை.ராமையா தெரு, தனியார் வீட்டு மனை பிரிவில் அமைக்கப்பட்டது. அந்த தெரு, முறையாக மாநகராட்சியிடம் தானமாக ஒப்படைக்கப்படவில்லை. இது குறித்து, 20 ஆண்டுகளாக வழக்கு இருந்து வந்தது. முறையாக, மாநகராட்சியிடம் தெரு ஒப்படைக்கப்படாததால், வரைப்படத்தில் இல்லை. இதற்கு முன்பிருந்த அதிகாரிகள், எப்படி வரைபட அனுமதி வழங்கினர் என தெரியாது. அது குறித்து உயர் அதிகாரிகள் தான் விசாரிக்க வேண்டும்.மாநகராட்சி அதிகாரி நாங்கள் முறையாக, பட்டா மற்றும் கட்டட அனுமதி பெற்று வீடு கட்டியுள்ளோம். மாநகராட்சிக்கு முறையாக வரி கட்டியும், குடிநீர், கழிவு நீர், குப்பை எடுப்பது உள்ளிட்ட அடிப்படை வசதிகளை இழந்துள்ளோம். சிலர் செய்யும் தவறுகளால், விதிகளை முறையாக பின்பற்றுவோரும் பாதிக்கப்பட்டுள்ளோம். 'இப்படி ஒரு தெருவே இல்லை' என்கிறார், மாநகராட்சி உதவி பொறியாளர். இதனால், மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம்.தாரணி, ராமையா தெரு.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X