சென்னை: வரும் 19ம் தேதி முதல், அரசியல், மதம் சார்ந்த கூட்டங்களை மாவட்ட கலெக்டர்களிடம் அனுமதி பெற்று நடத்தி கொள்ளலாம் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் மார்ச் 25 முதல் பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. தமிழக அரசின் சிறப்பான செயல்பாட்டினாலும், பொது மக்களின் ஒத்துழைப்பாலும் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, திறந்தவெளியில், சமூக இடைவெளியை கடைபிடிக்கும், அதிகபட்சமாக 50 சதவீதம் பேர் பங்கேற்கும் வகையில், அரசியல், விளையாட்டு, கல்வி, கலாசார, பொழுதுபோக்கு மற்றும் மதம்சார்ந்த நிகழ்ச்சிகளை டிச.,19 முதல் நடத்தி கொள்ளலாம். இக்கூட்டங்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்கள், சென்னை மாநகராட்சியில் போலீஸ் கமிஷனரிடம் முன் அனுமதி பெறுவது அவசியம். இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE