பொது செய்தி

தமிழ்நாடு

மதுரை 'எய்ம்ஸ்'க்கு மாநில அரசு நிலம் தரவில்லை?

Updated : டிச 16, 2020 | Added : டிச 16, 2020 | கருத்துகள் (19)
Share
Advertisement
மதுரை: 'மதுரை எய்ம்ஸ்க்கான நிலத்தை இன்னும் மாநில அரசு ஒப்படைக்கவில்லை' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.மதுரை தோப்பூரில், 1,264 கோடி ரூபாயில் அமையும், 'எய்ம்ஸ்' மருத்துவமனைக்கு, 2019 ஜனவரியில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். சுற்றுச்சுவர்இதற்கான நிதியை, ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை - ஜிக்கா - கடனாக வழங்குகிறது.வரும், 2022 செப்டம்பரில் பணிகள் முடிக்கப்படும் என,
AIIMS, Madurai, எய்ம்ஸ், எய்ம்ஸ் மருத்துவமனை, மதுரை

மதுரை: 'மதுரை எய்ம்ஸ்க்கான நிலத்தை இன்னும் மாநில அரசு ஒப்படைக்கவில்லை' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மதுரை தோப்பூரில், 1,264 கோடி ரூபாயில் அமையும், 'எய்ம்ஸ்' மருத்துவமனைக்கு, 2019 ஜனவரியில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். சுற்றுச்சுவர்இதற்கான நிதியை, ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை - ஜிக்கா - கடனாக வழங்குகிறது.வரும், 2022 செப்டம்பரில் பணிகள் முடிக்கப்படும் என, முதலில் உத்தரவாதம் தரப்பட்டது. ஆனால், இதுவரை ஜிக்காவிடம் இருந்து நிதியே கிடைக்கவில்லை. சுற்றுச்சுவர் மட்டும் கட்டப்படுகிறது.


latest tamil news




தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பாண்டியராஜா, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில், மதுரை எய்ம்ஸ் குறித்து, பல்வேறு விபரங்களை கோரினார்.

நேற்று பதிலளித்த மத்திய அரசு, 'மதுரை எய்ம்ஸ்க்கு, ஜிக்காவிடம் கடன் பெறும் நடவடிக்கை இன்னும் முடியவில்லை. ஒப்பந்தம் கையெழுத்தானால் தான் கடன் விபரம் தெரிவிக்கப்படும்.


நடவடிக்கை


'கடன் கிடைத்த பின்தான் கட்டுமான பணி துவங்கும். இன்றைய நிலவரப்படி, எய்ம்ஸ்க்கான நிலத்தை, மத்திய அரசிடம் மாநில அரசு ஒப்படைக்கவில்லை' என, தெரிவித்துள்ளது.


latest tamil news



பாண்டியராஜா கூறுகையில், ''முதலில் டிசம்பரில் கடன் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என, தெரிவித்த மத்திய அரசு இம்முறை அது பற்றி எந்த உத்தரவாதமும் தரவில்லை. ''இதனால் எப்போது கடன் கிடைக்கும், எப்போது கட்டுமான பணி துவங்கும் என்பது தெரியவில்லை. மத்திய - மாநில அரசுகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.


தொடரும் மர்மம்


தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில், எய்ம்ஸ் பற்றி விபரம் கோரிய பாண்டியராஜா, கட்டுமான பணி துவங்கும், முடியும் மாதம், ஜிக்கா கடன் திட்டத்தின் தற்போதைய நிலை, மருத்துவ, நர்சிங் படிப்பு எப்போது துவங்கும், எய்ம்ஸ்க்கு மத்திய - மாநில அரசுகள் சார்பில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனரா? எய்ம்ஸ் மாதிரி வரைபடம் கிடைக்குமா என்பன உள்ளிட்ட, 17 கேள்விகளை கேட்டு இருந்தார். இவற்றை முற்றாக ஒதுக்கிவிட்டு, சில கேள்விகளுக்கு மட்டும் முழுமையற்ற பதிலை மத்திய அரசு அளித்துள்ளது. எனவே, எய்ம்ஸ் கட்டுமான பணி எப்போது துவங்கும் என்பதில் மர்மம் தொடர்கிறது.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
16-டிச-202023:36:43 IST Report Abuse
தமிழவேல் நிலம் கைக்கு வர்றதுக்கு முன்னால எதுக்கு கல் நடனும் ?
Rate this:
Cancel
Sowdarpatti Rayarpadi Ramaswamy - Madurai,இந்தியா
16-டிச-202021:42:08 IST Report Abuse
Sowdarpatti Rayarpadi Ramaswamy மதுரை எம் பி என்ன செய்கின்றார் , மத்தியில் மாநிலத்தில் கேட்கவேண்டுயது தானே
Rate this:
Cancel
அறவோன் - Chennai,இந்தியா
16-டிச-202021:41:11 IST Report Abuse
அறவோன் அப்ரசண்டிகள் கூட்டத்தின் நீலச்சாயம் வெளுத்துப்போனதில் புலம்பும் சங்கத்தான்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X