சென்னிமலை: தங்கள் ஊரை ஒட்டிய பகுதியில், இனி எந்த ஒரு ஆலைக்கும் அனுமதி தரக்கூடாது என்று கூறி, பெரிய வேட்டுவபாளையம் மக்கள், சிப்காட் திட்ட அலுவலரிடம், மனு கொடுத்தனர்.
பெருந்துறை, சிப்காட் பகுதியை ஒட்டியுள்ள, பெரிய வேட்டுவபாளையத்தில், 60க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். சிப்காட் ஆலை கழிவுகளால், பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் இவர்கள், சிப்காட் திட்ட அலுவலர் நசீர் அகமதுவை, நேற்று நேரில் சந்தித்து, அழுகையுடன் குறைகளை தெரிவித்து, மனு கொடுத்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது: சிப்காட் ஆலை கழிவால், பெரிய பாதிப்புக்கு ஆளாகியுள்ளோம். இனி வரும் காலங்களில், எந்த ஒரு தொழிற்சாலையும் அமைக்க அனுமதிக்க கூடாது. மேலும், சிப்காட் திட்ட அலுவலகம் உறுதி தந்தபடி, ஊரைச்சுற்றி பொது இடம், சிப்காட் இடங்களில் மரக்கன்று நட்டு, சுற்றுச்சூழல் சீர்கேட்டை சரி செய்ய வேண்டும். எக்காரணத்தை கொண்டும், புது தொழிற்சாலையை தொடங்க அனுமதிக்க கூடாது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE