பொது செய்தி

தமிழ்நாடு

ஏலச்சீட்டு நடத்திய தம்பதி வேறு ஊருக்கு ஓட்டம்: கோடிக்கணக்கில் மோசடி செய்ததாக குற்றச்சாட்டு

Added : டிச 16, 2020
Share
Advertisement
புன்செய்புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டியில், ஏலச்சீட்டு நடத்திய தம்பதி, வீட்டை காலி செய்து, வேறு ஊருக்கு சென்றதால், அதிர்ச்சி அடைந்த மக்கள், போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தனர்.புன்செய்புளியம்பட்டி, மாதம் பாளையம் சாலை, அவ்வை வீதியை சேர்ந்தவர் செல்வராஜ், 52; இவரின் மனைவி தமிழரசி, 47; இருவரும் மாதாந்திர ஏலச்சீட்டு நடத்தி வந்தனர். இதில், 100க்கும் மேற்பட்டோர் சேர்ந்தனர்.

புன்செய்புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டியில், ஏலச்சீட்டு நடத்திய தம்பதி, வீட்டை காலி செய்து, வேறு ஊருக்கு சென்றதால், அதிர்ச்சி அடைந்த மக்கள், போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தனர்.


புன்செய்புளியம்பட்டி, மாதம் பாளையம் சாலை, அவ்வை வீதியை சேர்ந்தவர் செல்வராஜ், 52; இவரின் மனைவி தமிழரசி, 47; இருவரும் மாதாந்திர ஏலச்சீட்டு நடத்தி வந்தனர். இதில், 100க்கும் மேற்பட்டோர் சேர்ந்தனர். உரிய நேரத்தில் பணத்தை திருப்பித்தராமல் இழுத்தடிப்பதாக புகார் தெரிவித்து, 50க்கும் மேற்பட்டோர், புன்செய்புளியம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில், நேற்று புகார் கொடுக்க குவிந்தனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: சீட்டு முடிந்தும் பலருக்கு ஓராண்டுக்கு மேலாகியும், பணத்தை கொடுக்கவில்லை. பலமுறை நேரில் சென்று கேட்டபோது, சமாதானம் செய்து அனுப்பினர். இந்நிலையில் வீட்டை காலி செய்து விட்டு வேறு ஊருக்கு சென்று விட்டனர். கோடிக்கணக்கில் மோசடி செய்துள்ளனர். பணத்தை திரும்ப பெற்று தர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். பேச்சுவார்த்தை நடத்திய இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி, ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்குமாறு கூறினார். இதையடுத்து கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X