சம்பவம் செய்தி

தமிழ்நாடு

உறைவிட பள்ளியில் லேப்டாப் திருடிய வாலிபர் கைது

Added : டிச 16, 2020
Share
Advertisement
அந்தியூர்: அரசு பழங்குடியின உறைவிட மேல்நிலைப் பள்ளியில், லேப்டாப் திருடியவரை, மூன்று மாதங்களுக்குப் பிறகு, பர்கூர் போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம், பர்கூர்மலை வனப்பகுதியில், அரசு பழங்குடியின உறைவிட மேல்நிலைப் பள்ளி உள்ளது. பிளஸ் 2 வகுப்பு மாணவ, மாணவியருக்கு வழங்கவிட்டு, 67 லேப்டாப்புகளை ஒரு அறையில் வைத்திருந்தனர். கடந்த ஆக., மாதம் ஆசிரியர்கள் சரி பார்த்தபோது,

அந்தியூர்: அரசு பழங்குடியின உறைவிட மேல்நிலைப் பள்ளியில், லேப்டாப் திருடியவரை, மூன்று மாதங்களுக்குப் பிறகு, பர்கூர் போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம், பர்கூர்மலை வனப்பகுதியில், அரசு பழங்குடியின உறைவிட மேல்நிலைப் பள்ளி உள்ளது. பிளஸ் 2 வகுப்பு மாணவ, மாணவியருக்கு வழங்கவிட்டு, 67 லேப்டாப்புகளை ஒரு அறையில் வைத்திருந்தனர். கடந்த ஆக., மாதம் ஆசிரியர்கள் சரி பார்த்தபோது, எட்டு குறைந்தது. இதுகுறித்து பர்கூர் போலீசில் புகார் தரப்பட்டது. விசாரணை நடத்தி வந்த போலீசார், பர்கூர் மலை, பசுவன் காலனியை சேர்ந்த சிவக்குமார், 20, என்பவரை பிடித்து விசாரித்தனர். நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த விக்னேஷ், தமிழரசன் ஆகியோருடன் சேர்ந்து, திருடியதாக தெரிவித்தார். சிவக்குமாரை கைது செய்து, பவானி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கிளை சிறையில் அடைத்தனர். மற்ற இருவரையும் தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X