விழுப்புரம்: விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோடு, வி.கே.எஸ்., லட்சுமி நகரில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் வடிகால் வசதியின்றி மழைநீர் குளமாக தேங்கியுள்ளதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோடு, மகாராஜபுரம் பகுதியில் வி.கே.எஸ்., லட்சுமி நகர் அமைந்துள்ளது. இங்கு, மசூதிதெரு, எம்.ஜி.ஆர்., தெரு உட்பட பல்வேறு தெருக்கள் அமைந்துள்ளது.இந்த பகுதியில், 800க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இங்குள்ள, எம்.ஜி.ஆர்., தெரு உட்பட சில காலி மனைகளில் வடிகால் வசதியில்லாததால் மழை காலங்களில் தேங்கும் மழைநீர், செல்ல வழியின்றி குளம் போல் தேங்கியுள்ளது.மழை நீர் வடிய வழியில்லாததால் துர்நாற்றம் வீசுகிறது.
அதுமட்டுமின்றி, அந்த தண்ணீர் மூலம் உற்பத்தியாகும் கொசு அருகில் உள்ள குடியிருப்புகளை சூழ்வதால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.பொதுமக்கள் குடியிருக்கும் இப்பகுதிகளில் வடிகால் வசதியை ஏற்படுத்தி தருவதோடு, அங்கு காலி மனைகளில் தேங்கியுள்ள மழைநீரை அப்புறப்படுத்தவும் அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE