சேலம்: அரசு செலவில், செவிலியர் பட்டயப்படிப்பு படிக்க விரும்பும் பழங்குடியின மாணவியர் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து, சேலம் கலெக்டர் ராமன் வெளியிட்டுள்ள அறிக்கை: அரசு, அதன் உதவி பெறும் பள்ளிகளில், பிளஸ் 2 வகுப்பில், தேர்ச்சி பெற்று, 40 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் பெற்ற பழங்குடியின மாணவியர், மேற்படிப்புக்கு செவிலியர் பட்டயப்படிப்பில் சேர்ந்தால், மூன்று ஆண்டு கல்வி கட்டணம், புத்தகம், விடுதி, சீருடை, இதர கட்டண செலவாக, ஒரு மாணவிக்கு, 70 ஆயிரம் ரூபாய் செலவை அரசு ஏற்கும். அதனால், சேலம் மாவட்டத்தில் செவிலியர் பட்டயப்படிப்பில் சேர விரும்பும், தகுதியுள்ள பழங்குடியின மாணவியர், கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும், பழங்குடியினர் நலத்திட்ட அலுவலக அறை எண்: 305ல், தங்கள் விருப்ப கடிதம், ஜாதிச்சான்று, மதிப்பெண் சான்றுடன், டிச., 21க்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE