சேலம்: சேலம் மாநகராட்சியில், மக்கள், நிறுவனங்கள் செலுத்த வேண்டிய வரி, கட்டண தொகையில், 171 கோடி ரூபாய் நிலுவை உள்ளது. இதனால், நேற்று முதல், தீவிர வரிவசூல் முகாம் தொடங்கியது. மாநகராட்சியில் அமைக்கப்பட்டுள்ள, கணினி வரி வசூல் மையங்கள் - 13 மூலமும், இணையதளம் மூலமும், வரி, கட்டணங்களை செலுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சேலம், அம்மாபேட்டை மண்டலத்தில், உதவி கமிஷனர் ராம்மோகன், வரி செலுத்த வந்தவர்களுக்கு, இனிப்பு, மரக்கன்று வழங்கி, தீவிர வரி வசூல் முகாமை தொடங்கிவைத்தார். உரிய காலத்துக்குள் நிலுவை வரி, கட்டணத்தை செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என, மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன் எச்சரித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE