ஆத்தூர்: புதிதாக திறக்கப்பட்ட கட்டடத்தில், மின்வாரியத்தின் ஐந்து அலுவலகங்கள் இயங்குகின்றன. இதுகுறித்து, ஆத்தூர் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் அர்ஜூனன் வெளியிட்டுள்ள அறிக்கை: ஆத்தூர் கோட்ட மின்வாரிய அலுவலக வளாகத்தில், 50 லட்சம் ரூபாயில், புதிதாக அலுவலக கட்டடம் கட்டப்பட்டு, கடந்த, 10ல் திறக்கப்பட்டது. இதனால், காந்தி நகரில், வாடகை கட்டடத்தில் இயங்கி வந்த, உதவி செயற்பொறியாளர் - நகரம், ஆத்தூர் கிழக்கு அலுவலகம், உதவி பொறியாளர் - நகரம், தெற்கு அலுவலகம், மின்வாரிய கட்டுமான மேம்பாடு அலுவலகம் ஆகியவை, புது கட்டடத்துக்கு இடமாற்றப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE