பொருட்கள் சேதம்; 8 பேர் மீது வழக்கு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பொருட்கள் சேதம்; 8 பேர் மீது வழக்கு

Added : டிச 16, 2020
Share
சேலம்: 'ரிலையன்ஸ்' நிறுவனத்தில் நுழைந்து பொருட்களை சேதப்படுத்தியதாக, எட்டு பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்தனர்.டில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக, சேலம், ஐந்து ரோட்டில் உள்ள, 'ரிலையன்ஸ்' வர்த்தக மைய நிறுவனம் முன், முற்றுகை போராட்டத்தை, மா.கம்யூ., வி.சி., இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், நேற்று முன்தினம் நடத்தினர். அதில் பங்கேற்ற சிலர், 'ரிலையன்ஸ்'

சேலம்: 'ரிலையன்ஸ்' நிறுவனத்தில் நுழைந்து பொருட்களை சேதப்படுத்தியதாக, எட்டு பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்தனர்.
டில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக, சேலம், ஐந்து ரோட்டில் உள்ள, 'ரிலையன்ஸ்' வர்த்தக மைய நிறுவனம் முன், முற்றுகை போராட்டத்தை, மா.கம்யூ., வி.சி., இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், நேற்று முன்தினம் நடத்தினர். அதில் பங்கேற்ற சிலர், 'ரிலையன்ஸ்' வர்த்தக மையத்துக்குள் நுழைந்தனர். போலீசார், அவர்களை வெளியேற்றினர். ஆனால், மையத்தில் புகுந்த சிலர், பொருட்களை சேதப்படுத்தியதாக, அதன் பொதுமேலாளர் பிரதீப்குமார், பள்ளப்பட்டி போலீசில் புகார் அளித்தார். இதனால், வி.சி., கட்சி வீரபாண்டி சட்டசபை தொகுதி செயலர் திருமாமாரி, 30, சேலம் ஒன்றிய செயலர் செல்லகுமார், 29, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க, வடக்கு மாநகர மாவட்ட தலைவர் சதீஷ்குமார், 32, துணைத்தலைவர் கதிர்வேல், 30, உள்பட எட்டு பேர் மீது பொருட்களை சேதப்படுத்தியதாக போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X