பொது செய்தி

தமிழ்நாடு

வனப்பகுதியில் பிளாஸ்டிக் குப்பை அகற்றும் பணியில் வனத்துறையினர்

Added : டிச 16, 2020
Share
Advertisement
அரூர்: அரூர், வனப்பகுதியில் குவிந்த பிளாஸ்டிக் குப்பையை, வனத்துறையினர் அகற்றினர்.தர்மபுரி மாவட்டம், அரூரில், கொளகம்பட்டி வனப்பகுதி அருகே, அரசு டாஸ்மாக் கடை செயல்படுகிறது. இங்கு, மதுபானங்களை வாங்கும் குடிமகன்கள், வனப்பகுதியில், மது அருந்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். பின், தண்ணீர் பாட்டில்கள் மற்றும் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் டம்ளர்களை, அப்பகுதியில் குடிமகன்கள்

அரூர்: அரூர், வனப்பகுதியில் குவிந்த பிளாஸ்டிக் குப்பையை, வனத்துறையினர் அகற்றினர்.


தர்மபுரி மாவட்டம், அரூரில், கொளகம்பட்டி வனப்பகுதி அருகே, அரசு டாஸ்மாக் கடை செயல்படுகிறது. இங்கு, மதுபானங்களை வாங்கும் குடிமகன்கள், வனப்பகுதியில், மது அருந்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். பின், தண்ணீர் பாட்டில்கள் மற்றும் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் டம்ளர்களை, அப்பகுதியில் குடிமகன்கள் வீசிச்செல்வதால், வனப்பகுதியில், பிளாஸ்டிக் குப்பை மலை போல் தேங்கியுள்ளது. இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், பிளாஸ்டிக் குப்பையை, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் சாப்பிட்டு, உயிரிழக்கும் அபாயம் உள்ளது. இதையடுத்து, வனப்பகுதியில் தேங்கியுள்ள குப்பையை அகற்றும் பணியில் நேற்று, மொரப்பூர் வனச்சரகர் சிவக்குமார் தலைமையிலான வனத்துறையினர் மற்றும் பெண் பணியாளர்கள் ஈடுபட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X