அரூர்: அரூர் அருகே, கிணற்றில் எலக்ட்ரீசியன் இறந்து கிடந்தது குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர். அரூர் அடுத்த கருங்கல்பாடி புதூரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், 37, எலக்ட்ரீஷியன்; இவருக்கு, வனிதா, 29, என்ற மனைவியும், இரண்டு பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். மனநிலை பாதிப்புக்கு, பாலகிருஷ்ணன் சிகிச்சை பெற்று வந்துள்ளார். கடந்த, 11ல், காலை, 10:00 மணிக்கு, டி.ஆண்டியூருக்கு வேலைக்கு சென்ற அவர், வீடு திரும்பவில்லை. உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. நேற்று காலை, 10:00 மணிக்கு, டி.ஆண்டியூரில் உள்ள பொதுக்கிணற்றில் அவரது சடலம் மிதந்துள்ளது. அவரது மனைவி வனிதா புகாரின்படி, கோட்டப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE