கிருஷ்ணகிரி: கிராம வளர்ச்சி திட்டம் தயாரித்தல் தொடர்பான, கிராம ஊராட்சி திட்டக்குழு உறுப்பினர்களுக்கு இரண்டு நாள் பயிற்சி நடந்தது. வேப்பனஹள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்ட, 27 கிராம பஞ்சாயத்துகளில், 2021- 22ம் ஆண்டிற்கு கிராம வளர்ச்சி திட்டம் தயாரித்தல் தொடர்பான கிராம ஊராட்சி திட்டக்குழு உறுப்பினர்களுடன், பஞ்சாயத்து தலைவர், ஊராட்சி செயலர், மிஷன் அந்தோதயா ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் மற்றும் இதர துறை அலுவலர்களுக்கு, இரண்டு நாள் பயிற்சி நடந்தது. வேப்பனஹள்ளி ஒன்றிய குழுத் தலைவர் சரோஜினி பரசுராமன் தலைமை வகித்து பயிற்சியை துவக்கி வைத்து, பயிற்சியாளர்களுக்கு பயிற்சி கையேடு மற்றும் கொரோனா தடுப்பு பொருட்களை வழங்கினார். பி.டி.ஓ.,க்கள் சிவக்குமார், அன்சர்பாஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட அளவிலான பயிற்றுனர்கள் வாசுகி, கற்பகம் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE