சென்னை ஐஐடி.,யை தொடர்ந்து அண்ணா பல்கலை.,யிலும் பரவுது கொரோனா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சென்னை ஐஐடி.,யை தொடர்ந்து அண்ணா பல்கலை.,யிலும் பரவுது கொரோனா

Updated : டிச 16, 2020 | Added : டிச 16, 2020 | கருத்துகள் (6)
Share
சென்னை: சென்னை ஐஐடி.,யில் பலருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு உறுதியான நிலையில், அண்ணா பல்கலை.,யிலும் 6 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.சென்னை, கிண்டியில் உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனமான ஐ.ஐ.டி., செயல்படுகிறது. இங்கு 13 மாணவர்கள் விடுதி மற்றும் ஒரு விருந்தினர்கள் மாளிகை உள்ளது. இங்கு, ஒரு சில மாணவர்களுக்கு கொரோனா உறுதியானதை தொடர்ந்து, அவர்களுடன் தொடர்பில் இருந்த
ChennaiIIT, AnnaUniv, Corona, சென்னை, ஐஐடி, அண்ணா பல்கலை, கொரோனா

சென்னை: சென்னை ஐஐடி.,யில் பலருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு உறுதியான நிலையில், அண்ணா பல்கலை.,யிலும் 6 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை, கிண்டியில் உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனமான ஐ.ஐ.டி., செயல்படுகிறது. இங்கு 13 மாணவர்கள் விடுதி மற்றும் ஒரு விருந்தினர்கள் மாளிகை உள்ளது. இங்கு, ஒரு சில மாணவர்களுக்கு கொரோனா உறுதியானதை தொடர்ந்து, அவர்களுடன் தொடர்பில் இருந்த மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் என அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதனையடுத்து சென்னை ஐ.ஐ.டி.யில் உள்ள அனைத்து துறைகளையும் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. மறு உத்தரவு வரும் வரை எந்த துறைகளும் செயல்படக் கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.


latest tamil news


இதுவரையில் 183 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இன்று (டிச.,16) மேலும் 8 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 191 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், சென்னை அண்ணா பல்கலை.,யில் 550 பேருக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் 6 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X