சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சரக்கு லாரி - வேன் மோதல்: சிறுவன் உள்பட 2 பேர் பலி

Added : டிச 16, 2020
Share
Advertisement
ஓமலூர்: சரக்கு லாரி மீது வேன் மோதியதில், சிறுவன் உள்பட, இருவர் உயிரிழந்தனர். 18 பேர் காயம் அடைந்தனர்.சேலம் மாவட்டம், இடைப்பாடி அருகே, குஞ்சாம்பாளையத்தை சேர்ந்த, பெண்கள் உள்பட, 20 பேர், காடையாம்பட்டி தாலுகா, தீவட்டிப்பட்டி அருகே, தார்ச்சாலை பணிக்கு, தளவாடப்பொருட்களுடன், மினி வேனில் நேற்று புறப்பட்டனர். அதே பகுதியை சேர்ந்த, டிரைவர் பழனிசாமி, 45, ஓட்டினார். காலை, 9:45 மணிக்கு,

ஓமலூர்: சரக்கு லாரி மீது வேன் மோதியதில், சிறுவன் உள்பட, இருவர் உயிரிழந்தனர். 18 பேர் காயம் அடைந்தனர்.


சேலம் மாவட்டம், இடைப்பாடி அருகே, குஞ்சாம்பாளையத்தை சேர்ந்த, பெண்கள் உள்பட, 20 பேர், காடையாம்பட்டி தாலுகா, தீவட்டிப்பட்டி அருகே, தார்ச்சாலை பணிக்கு, தளவாடப்பொருட்களுடன், மினி வேனில் நேற்று புறப்பட்டனர். அதே பகுதியை சேர்ந்த, டிரைவர் பழனிசாமி, 45, ஓட்டினார். காலை, 9:45 மணிக்கு, ஓமலூர், காமலாபுரம் அருகே, தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது, குப்பூர், சர்வீஸ் சாலையிலிருந்து, டி.வி.எஸ்., மொபட்டில் வந்தவர், தேசிய நெடுஞ்சாலைக்குள் நுழைந்தார். அவர் மீது மோதாமல் இருக்க, பழனிசாமி, வலது பக்கம் வேனை திருப்பினார். கட்டுப்பாட்டை இழந்த வேன், ஒருபுறமாக கவிழ்ந்து, எதிரே, தர்மபுரியிலிருந்து சேலம் நோக்கிச்சென்ற, சரக்கு லாரி முன்புறம் மோதியது. அதில், வேனின் முன்புற சக்கரங்கள் இரண்டும், லாரியின் அடியில் சிக்கின. வேனில் வந்த அனைவரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை, அப்பகுதியினர், ஓமலூர் போலீசார் மீட்டு, ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு, தொழிலாளி மெய்வேல், 60, சிறுவன் மணிகண்டன், 4, உயிரிழந்தனர். காயமடைந்த டிரைவர் பழனிசாமி, தொழிலாளர்கள் வைத்தீஸ்வரன், 13, ராஜவேல், 24, ஆறுமுகம், 26, உத்ரசாமி, 30, ராஜா, 60, காவ்யா, 11, பாப்பாத்தி, 41, கோவிந்தராஜ், 32, பாலமுருகன், 24, துரைசாமி, 34, சக்திவேல், 21, பெருமாள், 45, அய்யத்தமாள், 55, கனகாம்பரம், 50, வேல்முருகன், 35, அடையாளம் தெரியாத, 55 வயது ஆண் உள்பட, 18 பேர் மேல்சிகிச்சைக்கு, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். அதில், மூன்று பேர் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளனர். இச்சம்பவத்தால், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X