மஹாத்மா காந்தி சிலை அவமதிப்பு: அமெரிக்கா கண்டனம்

Updated : டிச 16, 2020 | Added : டிச 16, 2020 | கருத்துகள் (9) | |
Advertisement
வாஷிங்டன்: வாஷிங்டன்னில், மஹாத்மா காந்தி சிலை அவமதிக்கப்பட்டதற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தும் பஞ்சாப் விவசாயிகளுக்கு ஆதரவாக அமெரிக்கா வாழ் சீக்கியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர், வாஷிங்டன்னில் நடந்த போராட்டத்தில், ஊடுருவிய காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்புகள்,
அமெரிக்கா, மஹாத்மாகாந்தி, கண்டனம், america, unitedstates,  mahatmagandhi, gandhi

வாஷிங்டன்: வாஷிங்டன்னில், மஹாத்மா காந்தி சிலை அவமதிக்கப்பட்டதற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.

வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தும் பஞ்சாப் விவசாயிகளுக்கு ஆதரவாக அமெரிக்கா வாழ் சீக்கியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர், வாஷிங்டன்னில் நடந்த போராட்டத்தில், ஊடுருவிய காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்புகள், வன்முறையை அரங்கேற்றியதுடன், மஹாத்மா காந்தி சிலையை அவமதிக்கும் செயல்களில் ஈடுபட்டனர். காந்தி சிலையின் முகத்தில் போஸ்டர் ஒன்றை ஒட்டினர். சிலை முழுவதும் கண்டன போஸ்டர்களை ஒட்டினர். இதற்கு இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகத்தை இந்திய தூதரகம் கேட்டு கொண்டது.


latest tamil news


இந்நிலையில், நிருபர்களை சந்தித்த வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் கெலியாக் மெகெனானி கூறுகையில், எந்த சிலையும், நினைவு சின்னங்களையும் அவமரியாதை செய்யக்கூடாது. குறிப்பாக, அமெரிக்காவின் கொள்கைகளான அமைதி, நீதி சுதந்திரம் ஆகியவற்றிற்கு போராடிய மஹாத்மா காந்தியின் சிலை அவமதிக்கப்படக்கூடாது. மஹாத்மா சிலை அவமதித்தது அதிர்ச்சியளிக்கிறது. பலமுறை அவமதிப்பு செய்தது வேதனையளிக்கிறது. அமெரிக்க தலைநகரில், மஹாத்மா காந்தி நற்பெயர் மதிக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Allah Daniel - பகுத்தறிவு சொம்பு,யூ.எஸ்.ஏ
16-டிச-202022:31:54 IST Report Abuse
Allah Daniel பாவம் காந்தி...ஏதாவது ஒரேயொரு டர்பன் தலையனாவது கண்டனம் சொல்லுறான பாரு...அன்டோனியா மைனாவை, அன்டோனியா மைனானு சொன்ன எல்லாவனும் கதறுவானுங்க...
Rate this:
Cancel
Nathan Jagan - Midland MI,யூ.எஸ்.ஏ
16-டிச-202022:03:39 IST Report Abuse
Nathan Jagan BJP should be தனுக்ஹ்ர் காந்திஜி’ஸ் “ ,,,,, ஈஸ்வர் அல்லாஹ் தேரே நம் .......”, ஐபி தே டூ நோட் உண்டர்ஸ்டாண்ட்
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
16-டிச-202017:25:10 IST Report Abuse
J.V. Iyer எதற்கு இதைப்போய் செய்கிறார்கள் இந்த கயவர்கள்? கீழ்த்தரமான எண்ணம் உள்ள தீவிரவாதிகள் எங்கும் உள்ளனர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X