கோல்கட்டா: 6 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள பா.ஜ., அரசு, வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனவும், பொய் வாக்குறுதிகளை மட்டுமே அளிப்பதாகவும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார்.
மேற்குவங்கத்தில் இன்னும் சில மாதங்களில் வரவிருக்கும் சட்டசபை தேர்தலுக்காக இப்போதிருந்தே அரசியல் கட்சிகள் பிரசாரத்தை துவங்கியுள்ளன. மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, ஜல்பைகுரி என்னும் இடத்தில் இடத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசியதாவது: நாங்கள் மேற்குவங்க மக்களுக்காகப் பணியாற்றியுள்ளோம். அவர்கள் எப்போதும் எங்களைத் திருடர்கள் என்றே குற்றம்சாட்டுவார்கள். ஆனால், பா.ஜ.,வை விட பெரிய திருடர்கள் யாரும் கிடையாது. அவர்கள் மிகப் பெரிய கொள்ளைக்காரர்கள்.

ஹிந்து, முஸ்லிம், சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்துவர்கள் இடையே வேறுபாட்டை ஊக்குவிப்பார்கள். இதைத்தான் அவர்கள் செய்வார்கள். கடந்த 6 ஆண்டுகளாக அவர்கள் ஆட்சியில் உள்ளனர். 2014, 2016 மற்றும் 2018 தேர்தல்களில் ஜல்பைகுரி - அலிபுர்தாரில் தேநீர் தோட்டங்கள் அமைக்கப்படும் என வாக்குறுதி அளித்தனர். வாக்குறுதியை நிறைவேற்றினார்களா? 2014 மற்றும் 2019 தேர்தல்களில் ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என வாக்குறுதி அளித்தனர். குறைந்தது 2 லட்சம் வேலைகளையாவது அவர்கள் கொடுத்தார்களா? 2014 தேர்தலில் அனைவரின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்தப்படும் என வாக்குறுதி அளித்தனர். நிறைவேற்றினார்களா? அவர்கள் பொய் வாக்குறுதிகளை மட்டுமே அளிப்பார்கள். இவ்வாறு அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE