இடுக்கி : கேரள உள்ளாட்சித் தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை இன்று நடக்கிறது.
கேரளாவில் கொரோனா பாதிப்புக்கு இடையே உள்ளாட்சி தேர்தல் டிச., 8, 10, 14ல் மூன்று கட்டங்களாக நடந்தது. 76.04 சதவீதம் ஓட்டுகள் பதிவாகின.மாநிலத்தில் 244 மையங்களில் ஓட்டு எண்ணிக்கை இன்று நடக்கிறது. இந்த தேர்தலில் கொரோனா பாதித்தவர்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் தபால் ஓட்டுகள் அளித்ததால் அதன் எண்ணிக்கை அதிகரித்து, 2 லட்சத்து, 11 ஆயிரத்து, 846 ஓட்டுகள் பதிவாகின.இடுக்கி மாவட்டத்தில் 52 ஊராட்சி, 8 ஊராட்சி ஒன்றியம், 2 நகராட்சி, ஒரு மாவட்ட ஊராட்சி ஆகியவற்றின், 981 வார்டுகளின் ஓட்டுகள், 11 மையங்களில் எண்ணப்படுகின்றன. காலை, 8:00 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை துவங்குகிறது. 12 மணிக்குள் ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் முடிவுகளை அறியலாம். 3213 பேர் களத்தில் உள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE