திருவனந்தபுரம்: கேரளாவில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரிகள் கூட்டணி முன்னிலையில் உள்ளன.
கேரளாவில் கடந்த 8, 10, 14ம் தேதிகளில் 3 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி நடத்தப்பட்ட இந்த தேர்தலில் 76 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. 3 கட்டங்களாக நடைபெற்ற இத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் ஆளும் மார்க்சிஸ்ட் கட்சியும், காங்கிரஸ் கட்சியும் அதிகமான இடங்களில் முன்னிலையில் உள்ளன. பா.ஜ., ஒரு சில இடங்களை தவிர மற்ற இடங்களில் பின்தங்கியுள்ளது.

காலை 11.00 மணி நிலவரப்படி முன்னிலை நிலவரம்,
மாநகராட்சி:
மொத்தம் - 6
மார்க்சிஸ்ட் கம்யூ., தலைமையிலான இடதுசாரிகள் கூட்டணி - 4
காங்., கூட்டணி - 2
நகராட்சி:
மொத்தம் - 86
இடதுசாரிகள் கூட்டணி - 36
காங்., கூட்டணி - 40
பா.ஜ., - 3
மாவட்ட ஊராட்சிகள்:
மொத்தம்: 14
இடதுசாரிகள் கூட்டணி - 10
காங்., கூட்டணி - 4
ஊராட்சி ஒன்றிங்கள்:
மொத்தம் - 152
இடதுசாரிகள் கூட்டணி - 98
காங்., கூட்டணி - 53
பா.ஜ., - 1
கிராம ஊராட்சிகள்:
மொத்தம் - 941
இடதுசாரிகள் கூட்டணி - 444
காங்., கூட்டணி - 354
பா.ஜ., - 32
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE