பொது செய்தி

தமிழ்நாடு

'ஸ்கூட்டர்' மானியம் வழங்க இலக்கு 

Added : டிச 16, 2020
Share
Advertisement
பொள்ளாச்சி : பொள்ளாச்சி பகுதியிலுள்ள பேரூராட்சிகளில், தகுதியுள்ள பெண்களுக்கு ஸ்கூட்டர் வாங்க மானியம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.தமிழக அரசு, சுய தொழில் புரியும் மற்றும் பணியாற்றும் பெண்களின் வசதிக்காக, ஸ்கூட்டர் வாங்க மானியம் வழங்குகிறது. பொள்ளாச்சியில் உள்ள பேரூராட்சிகளுக்கு, மானியம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.சூளேஸ்வரன்பட்டி

பொள்ளாச்சி : பொள்ளாச்சி பகுதியிலுள்ள பேரூராட்சிகளில், தகுதியுள்ள பெண்களுக்கு ஸ்கூட்டர் வாங்க மானியம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு, சுய தொழில் புரியும் மற்றும் பணியாற்றும் பெண்களின் வசதிக்காக, ஸ்கூட்டர் வாங்க மானியம் வழங்குகிறது. பொள்ளாச்சியில் உள்ள பேரூராட்சிகளுக்கு, மானியம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சியில், 29 பெண்கள்; ஜமீன் ஊத்துக்குளி - 24; சமத்துார் - 8; ஆனைமலை - 26; வேட்டைக்காரன்புதுார் - 25; ஒடையகுளம் - 19, கோட்டூர் - 39 பெண்களுக்கு மானியம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதில், 17 சதவீதம் எஸ்.சி., மற்றும் எஸ்.டி., இனத்தவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இத்திட்டத்தில், 18 முதல், 45 வயதுடைய பெண்கள் விண்ணப்பிக்கலாம். ஆண்டு வருவாய், 2.5 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஸ்கூட்டர் வாங்க, விலையின், 50 சதவீதம் அல்லது, 25,000 ரூபாய் எது குறைவோ அந்த தொகை மானியமாக வழங்கப்படும்.
பயனடைய விரும்பும் பெண்கள், வயது வரம்புச்சான்று, இருப்பிடச்சான்று, இருசக்கர வாகன ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள், பணியில் இருப்பதற்கான சான்று, ஆதார் அட்டை, கல்வித்தகுதிக்கான சான்றிதழ், ஜாதிச்சான்றிதழ் போன்றவற்றின் நகல், இருசக்கர வாகனத்திற்கான கொட்டேஷன் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X