கிராம வளர்ச்சிக்கு திட்டமிடல் : வரைபடத்துடன் மக்கள் சந்திப்பு

Added : டிச 16, 2020
Share
Advertisement
ஆனைமலை : ஆனைமலை, தென்சங்கம்பாளையம் ஊராட்சியில், கிராம வளர்ச்சி திட்டத்துக்காக, வரைபடம் வரைந்து மக்கள் சந்திப்பு கூட்டம் நடத்தப்பட்டது.கிராமங்களில் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும், கட்டமைப்புகளை மேம்படுத்தவும், ஆண்டுதோறும் கிராம வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஆனைமலை ஒன்றியத்திலுள்ள, 19 ஊராட்சிகளில் திட்டத்தின் பணிகள் நடந்து வருகிறது.ஒவ்வொரு
 கிராம வளர்ச்சிக்கு திட்டமிடல் : வரைபடத்துடன் மக்கள் சந்திப்பு

ஆனைமலை : ஆனைமலை, தென்சங்கம்பாளையம் ஊராட்சியில், கிராம வளர்ச்சி திட்டத்துக்காக, வரைபடம் வரைந்து மக்கள் சந்திப்பு கூட்டம் நடத்தப்பட்டது.

கிராமங்களில் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும், கட்டமைப்புகளை மேம்படுத்தவும், ஆண்டுதோறும் கிராம வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஆனைமலை ஒன்றியத்திலுள்ள, 19 ஊராட்சிகளில் திட்டத்தின் பணிகள் நடந்து வருகிறது.ஒவ்வொரு ஊராட்சியிலும், ஊராட்சி தலைவர், செயலாளர், வறுமை ஒழிப்புச்சங்கம், மகளிர் குழுக்கள் என, ஒன்பது பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்தக்குழு கிராமங்களில் தேவைப்படும் அடிப்படை வசதிகள், கட்டமைப்புகள் குறித்து ஆய்வு செய்து, மக்களிடம் கருத்துக்களை கேட்டறிந்து, அதை அறிக்கையாக அரசுக்கு அனுப்பி வருகிறது.
திட்டத்தின் ஒரு பகுதியாக, ஒவ்வொரு ஊராட்சியிலும், 'மக்கள் திட்டமிடல் இயக்கம்' என்ற தலைப்பில், மக்கள் சந்திப்பு கூட்டம் நடத்தி, வரைபடம் வரையப்படுகிறது. இதில், கிராமத்தின் வளங்கள், தேவைகள், அடிப்படை கட்டமைப்புகளை எழுதி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.முதற்கட்டமாக நேற்று, தென்சங்கம்பாளையத்தில் ஊராட்சி தலைவர் அண்ணாத்துரை, செயலாளர் மகாலட்சுமி தலைமையில் வரைபடம் வரைந்து, கூட்டம் நடத்தப்பட்டது. தொடர்ந்து ஒவ்வொரு நாளில் ஒவ்வொரு ஊராட்சியில் கூட்டம் நடத்தப்பட உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X