பொது செய்தி

தமிழ்நாடு

உற்பத்தியாளர் கருத்தரங்கு : வேளாண் சட்டத்துக்கு வரவேற்பு

Added : டிச 16, 2020
Share
Advertisement
பொள்ளாச்சி : நபார்டு வங்கி சார்பில் நடந்த, உழவர் உற்பத்தியாளர் கருத்தரங்கில், மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.நபார்டு வங்கி சார்பில், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் வளர்ச்சி திட்டம் குறித்த கருத்தரங்கு நடந்தது. நபார்டு வங்கி கட்டடத்தில் நடந்த கருத்தரங்கில், தமிழகம் முழுவதிலும் இருந்து, 100க்கும் மேற்பட்ட உற்பத்தி

பொள்ளாச்சி : நபார்டு வங்கி சார்பில் நடந்த, உழவர் உற்பத்தியாளர் கருத்தரங்கில், மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
நபார்டு வங்கி சார்பில், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் வளர்ச்சி திட்டம் குறித்த கருத்தரங்கு நடந்தது. நபார்டு வங்கி கட்டடத்தில் நடந்த கருத்தரங்கில், தமிழகம் முழுவதிலும் இருந்து, 100க்கும் மேற்பட்ட உற்பத்தி நிறுவனங்களின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.கோவை, நீலகிரி மாவட்டங்களின் நபார்டு வங்கி பொது மேலாளர் திருமலாராவ் தலைமை வகித்தார். மாவட்ட முதன்மை பொது மேலாளர் செல்வராஜ் முன்னிலை வகித்தனர். பொள்ளாச்சி, பெரும்பதி கிராம பசுமை தென்னை உழவர் உற்பத்தியாளர் நிறுவன தலைவர் திருவேங்கடம் பங்கேற்றார்.
கருத்தரங்கில், நபார்டு வங்கியின் வளர்ச்சி திட்டம், செயல்பாட்டில் உள்ள திட்டங்கள், எதிர்காலத்தில் தேவைப்படும் திட்டங்கள், முதன்மை திட்டங்களுக்கு தேவைப்படும் நிதி உதவி ஆகியன குறித்து விளக்கப்பட்டன. சமீபத்தில் மத்திய அரசு நிறைவேற்றிய, மூன்று வேளாண் சட்டங்களின் நன்மைகள், பயன்கள் குறித்து, உழவர் உற்பத்தியாளர் நிறுவன நிர்வாகிகளுக்கு தெளிவுபடுத்தப்பட்டு, அந்த சட்டங்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X