நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் பி.டி.ஓ.,வாக அருளப்பன் பணியாற்றினார். அப்பகுதியில், பல்வேறு அரசு திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதற்காக, அரசு ஒப்பந்தாரர்கள் சிலர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு, ஒப்பந்த பணி முடிந்ததும், அதற்கான தொகையை ஒப்பந்தாரர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். குறிப்பிட்ட பணியை முடித்த, ஒப்பந்ததாரருக்கு சேர வேண்டிய, 19 லட்சம் ரூபாய் வந்து சேரவில்லை. அவரும், பி.டி.ஓ., அலுவலகம், வங்கிக்கு மாறி மாறி சென்று வந்துள்ளார். இதற்கிடையில், பி.டி.ஓ.., அருளப்பன், பள்ளிபாளையம் ஒன்றியத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில், ஒப்பந்ததாரருக்கு சேரவேண்டிய, 19 லட்சம் ரூபாய், வேறொரு ஒப்பந்ததாரர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், பி.டி.ஓ., அருளப்பனின் கவனக்குறைவால், வேறொரு ஒப்பந்தாரர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, பி.டி.ஓ., அருளப்பன், காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். தற்போது, மாற்று வங்கி கணக்கில் செலுத்தப்பட்ட, 19 லட்சம் ரூபாயை மீட்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச்சம்பவம், ஒப்பந்தாரர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE