பொது செய்தி

தமிழ்நாடு

அறிவியல் தொழில் நுட்பத்தில் 'ஸ்மார்ட் ஹவுஸ்'; வாலிபர் சாதனை

Added : டிச 16, 2020
Share
Advertisement
நாமக்கல்: தன் வீட்டை அறிவியல் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி, 'ஸ்மார்ட் ஹவுஸாக' மாற்றி சாதனை படைத்துள்ளார், நாமக்கல் பொறியியல் பட்டதாரி.நாமக்கல் மாவட்டம், முதலைப்பட்டிபுதூர், குறிஞ்சி நகரை சேர்ந்தவர் நவீன்குமார், 29. பொறியியல் பட்டதாரியான இவர், கணினி அறிவியலை பாடமாக படித்துள்ளார். படிக்கும்போது இணையதளத்தில், தன் தேடலை தொடங்கியவருக்கு, அங்கு கிடைத்த ஒவ்வொரு தகவல்

நாமக்கல்: தன் வீட்டை அறிவியல் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி, 'ஸ்மார்ட் ஹவுஸாக' மாற்றி சாதனை படைத்துள்ளார், நாமக்கல் பொறியியல் பட்டதாரி.


நாமக்கல் மாவட்டம், முதலைப்பட்டிபுதூர், குறிஞ்சி நகரை சேர்ந்தவர் நவீன்குமார், 29. பொறியியல் பட்டதாரியான இவர், கணினி அறிவியலை பாடமாக படித்துள்ளார். படிக்கும்போது இணையதளத்தில், தன் தேடலை தொடங்கியவருக்கு, அங்கு கிடைத்த ஒவ்வொரு தகவல் மற்றும் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி, 'ஸ்மார்ட்' ஹவுஸாக மாற்றியுள்ளார். வீட்டிற்குள் நுழைந்ததும், மின் விசிறி இயங்குவது, கணினி ஆன் ஆவது, மாலை சூரிய வெளிச்சம் குறைந்தவுடன், மின் விளக்குகள் எரிய துவங்குவது, தானியங்கியாக வீட்டை சுத்தம் செய்யும் ரோபட், உட்கார்ந்த இடத்திலிருந்தே, மொபைல் போன் மூலம், வீட்டில் உள்ள பொருள்களான, 'டிவி' உள்ளிட்ட மின்சாதன பொருள்களை கட்டுப்படுத்துவது என, பல தொழில் நுட்ப பணிகளை செய்துள்ளார்.

இது குறித்து, நவீன்குமார் கூறியதாவது: ஸ்மார்ட் ஹவுஸ் என்ற தொழில் நுட்பத்தில், ஆட்டோமேஷன் பண்ணியிருக்கிறேன். அதற்காக ஒரு, சாப்ட்வேரை பயன்படுத்தி, வீட்டை ஆட்டோமேட்டிக்காக இயங்கும் மாதிரி மாற்றம் செய்துள்ளேன். இந்த கண்டுபிடிப்புகள் புதிதல்ல. ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றில் புதுமையாக செய்திருக்கிறேன். இது, இன்டர்நெட் இல்லை என்றாலும் வேலை செய்யும். சோலார் பேனல் வைத்து, மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. சோலார் பேனலுக்கு லித்தியன் பேட்டரி நானே தயாரித்து, பயன்படுத்தி சுவற்றில் மாட்டி உள்ளேன். இந்த பேட்டரிதான் ?ஹலெட். இந்த பேட்டரியை, இந்திய அளவில் உருவாக்கி பயன்படுத்தி இருப்பது முதன் முறை. தற்போதுள்ள இளைஞர்கள், ஒரு பொருள் கிடைக்கவில்லை என்றால், அவற்றை தேடி அலைய வேண்டாம். நீங்களே தயாரித்து, பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, இந்த கண்டுபிடிப்பு மூலம் உணர்த்தி இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X