குமாரபாளையம்: நாமக்கல் மாவட்ட அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் சார்பில், சபரிமலை சேவைக்கு, தொண்டர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். கேரளா மாநிலம், சபரிமலை ஐயப்பன் கோவிலில், பக்தர்களுக்கு சேவை செய்யவும், கோவில் வளாகத்தை தூய்மைபடுத்தவும், ஆண்டு தோறும், 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பக்தர்களை அனுப்பி வைப்பது வழக்கம். இந்தாண்டு சேவை செய்ய, அகில பாரத ஐயப்ப சேவா சங்க தொண்டர்கள், 20 பேர் குமாரபாளையத்திலிருந்து, முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். மாநில துணைத்தலைவர் பாலசுப்ரமணி தலைமை வகித்தார்.
மாவட்ட செயலர் ஜெகதீஸ் கூறியதாவது: சேவைக்கு செல்லும் தொண்டர்கள், சபரிமலை வரும் பக்தர்களுக்கு மூலிகை குடிநீர் வழங்குதல், பிராணவாயு சிகிச்சை வழங்குதல், உடல்நலம் குறைந்தால் ஸ்ட்ரெட்சர் மூலம் பம்பைக்கு கொண்டு சென்று, மருத்துவ சிகிச்சை செய்ய உதவுதல், கோவிலுக்கு வந்த இடத்தில் இறைவனடி சேர நேர்ந்தால், அவரது விலாசம் எது, என அறிந்து அவர் இல்லத்திற்கு கொண்டு போய் சேர்த்தல், கோவில் வளாகம் முழுதும் தூய்மையாக வைத்திருத்தல் உள்ளிட்ட சேவைகளை செய்வர். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE