கரூருக்கு இன்று முதல்வர் வருகை: ரூ.627 கோடியில் புதிய திட்டப்பணிக்கு அடிக்கல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கரூருக்கு இன்று முதல்வர் வருகை: ரூ.627 கோடியில் புதிய திட்டப்பணிக்கு அடிக்கல்

Added : டிச 16, 2020
Share
கரூர்: கரூருக்கு இன்று வருகை தரும் முதல்வர் பழனிசாமி, 627 கோடி ரூபாய் மதிப்பிலான, 2,089 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.தமிழக முதல்வர் பழனிசாமி, கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இன்று காலை, 11:00 மணிக்கு, புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளார். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி

கரூர்: கரூருக்கு இன்று வருகை தரும் முதல்வர் பழனிசாமி, 627 கோடி ரூபாய் மதிப்பிலான, 2,089 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.


தமிழக முதல்வர் பழனிசாமி, கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இன்று காலை, 11:00 மணிக்கு, புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளார். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், பொதுசுகாதாரத்துறை, வேளாண்மைத்துறை, தொழில்துறை, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகம், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை, தமிழ்நாடு குடிசை பகுதி மாற்று வாரியம் ஆகிய துறைகள் சார்பில், 627 கோடி ரூபாய் மதிப்பிலான, 2,089 புதிய திட்டப்பணிகளுக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்ட உள்ளார். 118.53 கோடி ரூபாய் மதிப்பிலான, 28 முடிவுற்ற திட்டப்பணிகளை துவக்கி வைக்க உள்ளார். பின்னர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மகளிர் திட்டம், கூட்டுறவு துறை, வேளாண் பொறியியல்துறை, தோட்டக்கலைத்துறை, தொழிலாளர் நலவாரியம், கால்நடை பராமரிப்பு, மாவட்ட தொழில் மையம், தமிழ்நாடு குடிசை பகுதி மாற்று வாரியம் ஆகிய துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு, 35 கோடி ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். மேலும், கொரோனா தடுப்பு பணிகள் குறித்து, அனைத்து துறை முதன்மை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. பின், குறு, சிறு நடுத்தர தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகள், விவசாய சங்க பிரதிநிதிகள், மகளிர் சுய உதவிக்குழுவிருடன் கலந்தாய்வு மேற்கொள்கிறார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X