பொது செய்தி

தமிழ்நாடு

ஆத்துப்பாளையம் அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பு

Added : டிச 16, 2020
Share
Advertisement
கரூர்: ஆத்துப்பாளையம் அணையில் இருந்து, கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது. கரூர் மாவட்டம், கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு, மழை காரணமாக தண்ணீர் வந்ததால், நொய்யல் வாய்க்காலில் பாசனத்துக்காக, தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. நேற்று காலை, 7:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 30 கன அடி தண்ணீர் வந்தது. 26.90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம், 24.27 அடியாக இருந்தது. நொய்யல் வாய்க்காலில் திறக்கப்பட்ட

கரூர்: ஆத்துப்பாளையம் அணையில் இருந்து, கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது. கரூர் மாவட்டம், கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு, மழை காரணமாக தண்ணீர் வந்ததால், நொய்யல் வாய்க்காலில் பாசனத்துக்காக, தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. நேற்று காலை, 7:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 30 கன அடி தண்ணீர் வந்தது. 26.90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம், 24.27 அடியாக இருந்தது. நொய்யல் வாய்க்காலில் திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு, 70 கன அடியில் இருந்து நேற்று காலை, 94 கன அடியாக உயர்த்தப்பட்டது.

* மாயனூர் கதவணைக்கு நேற்று காலை, 7:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 2,323 கன அடி தண்ணீர் வந்தது. காவிரியாற்றில், 1,423 கன அடியும், நான்கு கிளை வாய்க்காலில், 920 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது.


* அமராவதி அணைக்கு நேற்று காலை, 7:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 1,031 கன அடி தண்ணீர் வந்தது. புதிய வாய்க்காலில், 200 கன அடியும், அமராவதி ஆற்றில், 800 கன அடியும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம், 89.54 அடியாக இருந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X