அரசியல் செய்தி

தமிழ்நாடு

ரஜினியால் அரசியல் மாற்றம்: உ.உ.க., தலைவர் பேச்சு

Added : டிச 16, 2020
Share
Advertisement
பல்லடம்:''ரஜினி கட்சி துவக்கத்தால் அரசியலில் மாற்றம் ஏற்படும்,'' என, உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து பேசினார்.திருப்பூர் மாவட்டம், பல்லடம், காரணம்பேட்டை உழவாலயம் அலுவலகத்தில், உ.உ., கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் நடந்தது. மாநில தலைவர் செல்லமுத்து தலைமை வகித்து, பேசியதாவது;சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கட்சிகளின் கூட்டணி, மக்களின் விருப்பு


பல்லடம்:''ரஜினி கட்சி துவக்கத்தால் அரசியலில் மாற்றம் ஏற்படும்,'' என, உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து பேசினார்.
திருப்பூர் மாவட்டம், பல்லடம், காரணம்பேட்டை உழவாலயம் அலுவலகத்தில், உ.உ., கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் நடந்தது. மாநில தலைவர் செல்லமுத்து தலைமை வகித்து, பேசியதாவது;சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கட்சிகளின் கூட்டணி, மக்களின் விருப்பு வெறுப்பு என, பல காரணம் இருந்தாலும், பணத்துக்காக ஓட்டைமாற்றி போடும் கூட்டம், தமிழகத்தில் உள்ளது. ரஜினி கட்சி துவக்கம், சசிகலா விடுதலை போன்றவற்றால், அரசியலில் மாற்றம் ஏற்படும். பல்வேறு அதிருப்தி இருந்தாலும், பா.ஜ., கூட்டணி தான் ஆட்சி அமைக்கும்.தள்ளாத வயதிலும், எழுந்து நின்று விவசாயிகளுக்கு மரியாதை அளித்தவர் கருணாநிதி. அவர் வழியில் வந்த ஸ்டாலின், மரியாதை தெரியாதவராக உள்ளார். விவசாயிகளுக்கு மரியாதை அளிப்பவர்களுக்கே, தேர்தலில் ஆதரவளிப்போம்.இவ்வாறு, அவர் பேசினார்.சங்கத்தின் மாநில செயலாளர் ஈஸ்வரன், பொருளாளர் பாலசுப்பிரமணியம், மாவட்ட செயலாளர் சோமசுந்தரம், மாவட்ட பொருளாளர் வெங்கடாசலம் முன்னிலை வகித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X