நகை பறித்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நகை பறித்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை

Added : டிச 16, 2020
Share
வேலூர்: பெண்ணிடம், தங்கச்செயின் பறித்த வாலிபருக்கு, வேலூர் நீதிமன்றத்தில், 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.வேலூர், தோட்டப்பாளையத்தை சேர்ந்தவர் அமுதா, 55; இவர், அதே பகுதியில் விறகு கடை வைத்திருக்கிறார். கடந்த, 2015 பிப்.,1ல் கடையில் இருந்தார். அப்போது, கொணவட்டத்தை சேர்ந்த, முகமது கலீல், 25, கடைக்கு வந்து, கத்தியை காட்டி மிரட்டி, அமுதா அணிந்திருந்த, ஐந்து பவுன் தங்க செயினை

வேலூர்: பெண்ணிடம், தங்கச்செயின் பறித்த வாலிபருக்கு, வேலூர் நீதிமன்றத்தில், 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.


வேலூர், தோட்டப்பாளையத்தை சேர்ந்தவர் அமுதா, 55; இவர், அதே பகுதியில் விறகு கடை வைத்திருக்கிறார். கடந்த, 2015 பிப்.,1ல் கடையில் இருந்தார். அப்போது, கொணவட்டத்தை சேர்ந்த, முகமது கலீல், 25, கடைக்கு வந்து, கத்தியை காட்டி மிரட்டி, அமுதா அணிந்திருந்த, ஐந்து பவுன் தங்க செயினை பறித்துச் சென்றார். வேலூர், வடக்கு போலீசார் முகமது கலீலை கைது செய்தனர். இந்த வழக்கு, வேலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பாலசுப்பிரமணியம், குற்றவாளி முகமது கலீலுக்கு, 10 ஆண்டு சிறை தண்டனை, 1,500 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். முகமது கலீல், வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X