போளூர்: தமிழகத்தில், குழந்தை திருமணம் நடப்பதில், திருவண்ணாமலை மாவட்டம் மூன்றாவது இடம் பிடித்துள்ளது என, போளூரில் நடந்த விழிப்புணர்வு முகாமில் தெரிவிக்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்ட, சமூக பாதுகாப்பு துறை, மாவட்ட குழந்தைகள் அலகு சார்பில், குழந்தை திருமணங்களை தடுப்பது குறித்த விழிப்புணர்வு முகாம், போளூரில் நடந்தது. பி.டி.ஓ., பாஸ்கரன் தலைமை வகித்தார். இதில், மாவட்ட, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பார்வதி (பொறுப்பு) பேசியதாவது: திருவண்ணாமலை மாவட்டத்தில், பெண் குழந்தைகளை பாதுகாப்பதில் உள்ள சிரமத்தால், பெரும்பாலான கிராமப்புற பெற்றோர், குழந்தை திருமணங்களை நடத்துகின்றனர். கொரோனா ஊரடங்கு காலத்தில் மட்டும், மாவட்டத்தில் நடந்த ஏராளமான குழந்தை திருமணங்கள், அதிகாரிகளால் தடுக்கப்பட்டுள்ளன. குழந்தை திருமணம் நடப்பதில், மாநிலத்தில் திருவண்ணாமலை மாவட்டம், மூன்றாமிடம் பிடித்துள்ளது. இந்நிலை மாற, அந்தந்த பஞ்., தலைவர்கள் இச்செயலை தடுத்து, அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். கிராமங்களில், மக்கள் பிரதிநிதிகள், அங்கன்வாடி பணியாளர்கள், வி.ஏ.ஓ., ஆசிரியர்கள் என, யார் வேண்டுமானாலும் புகார் செய்யலாம். குழந்தை திருமணங்கள் நடத்திய பலர், கைதாகி, ஜாமின் கிடைக்காமல் சிறையில் உள்ளனர். இத்தகவல்களை கிராம மக்களிடையே கூறி, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE