புதுடில்லி : மத்திய அரசின் பணியாளர் நலத்துறை வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:
தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நிபுணர் உறுப்பினர்களாக, தமிழகத்தைச் சேர்ந்த, முன்னாள் தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன்; முன்னாள் வருவாய் நிர்வாக ஆணையரும், ஓய்வு பெற்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரியுமான சத்யகோபால் நியமிக்கப்படுகின்றனர்.மேலும், இந்திய வனத்துறை அதிகாரியாக பணியாற்றிய, டாக்டர் அருண் குமார் வர்மாவும், நிபுணர் உறுப்பினராக நியமிக்கப்படுகிறார். இந்த நியமனங்களுக்கு, மத்திய அமைச்சரவை நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE