புதுடில்லி:
1.ஒடிசா மாநிலம் கஜபதி மாவட்டத்தில் உள்ள நடுநிலை பள்ளியின் ஆசிரியருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்தனர். இதில், அவர், அவரது மனைவி மற்றும் மகன் பெயரில் ரூ.4.3 கோடி மதிப்புள்ள சொத்து உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. பாலகேமுண்டி பகுதியில் 8 இடங்களில் பல அடுக்குமாடி குடியிருப்புகளும், நிலங்களும் வாங்கியது தெரியவந்தது. தவறான வழியில் சொத்து சேர்த்ததாக வந்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி, சொத்துகளை பறிமுதல் செய்தனர்
2. அசாமில், போக்குவரத்து துறையில் புகார் ஒன்றை அளித்தார். அதில், தனக்கு விற்பனை செய்யப்பட்ட கார் பழையது. பழைய காரை புதிதாக பெயின்ட் செய்து விற்பனை செய்ததாக தெரிவித்திருந்தார். அந்த புகாரின் அடிப்படையில், கம்ரூப் பகுதி போக்குவரத்து அதிகாரிகள், கவுகாத்தியில் உள்ள கார் விற்பனையகத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். அதில், பல தவறுகள் கண்டுபிடிக்கப்பட்டது. பழைய காருக்கு, பெயின்ட் செய்து புதிதுபோல் விற்பனை செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை டீலரும் ஒப்பு கொண்டார். இதனையடுத்து அந்த டீலரின் வர்த்தக உரிமையை , அசாம் அரசு தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.
03. சேலத்தை சேர்ந்த 55 வயதான பெண் ஒருவர், கேரளாவின் கொச்சி அருகேயுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இம்தியாஸ் அகமது என்ற வழக்கறிஞர் வீட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 5 ம் தேதி , அந்த பெண், வீட்டின் பால்கனியில் இருந்து கீழே விழுந்துவிட்டதாக உறவினர்களுக்கு தகவல் வந்தது. அவர்கள் விரைந்து சென்று பார்த்த போது, அந்த பெண்ணை, வீட்டின் உரிமையாளர் சித்ரவதை செய்ததும், வீட்டில் அடைத்து வைத்திருந்த விஷயமும் தெரியவந்தது. அங்கிருந்து தப்பிப்பதற்காகவே, 6வது மாடியில் இருந்து இரண்டு சேலைகளை கட்டி இறங்கும்போது தவறி விழுந்த தகவல் தெரியவந்துள்ளது. தொடர்ந்து சிகிச்சை பலனின்றி அந்த பெண் உயிரிழந்தார். அவரது கணவர், கண் பார்வை கிடையாது. இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
04.போலீஸ் எனக்கூறி முதியவர்களிடம் கொள்ளையடித்து வந்த டிவி நடிகரை, மும்பை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
தமிழக நிலவரம்
01.ராமநாதபுரம் மாவட்டம், அக்காள் மடத்தில், அரசு பள்ளி ஆசிரியர், வீட்டின் பின்புறம் உள்ள பகுதியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. கடன் பிரச்னை காரணமாக நேற்று இரவு கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
02.மயிலாடுதுறை நீதிமன்ற பொருள் காப்பகத்தில் இருந்து 279 குவாட்டர் மதுபாட்டில்களை திருடியதாக நீதிமன்ற உதவியாளர் மணிவண்ணன் கைது செய்யப்பட்டார்.
03.மருத்துவ கவுன்சிலிங்கின் போது,போலி நீட் சான்றிதழ் அளித்தது தொடர்பாக தந்தை, மகள் போலீஸ் விசாரணைக்கு மீண்டும் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
04.வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே, இலவம்பாடி பகுதி கிராம நிர்வாக அலுவலர் ரேவதி, பட்டா மாற்றுவதற்காக விவசாயியிடம் ரூ.2,500 லஞ்சம் வாங்கினார். அவரை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர்.

05.கோத்தகிரி சோலூர் மட்டம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கீழ் கோத்தகிரி கிளிப்பி பகுதியை சேர்ந்த சாமி, 41, இவரது நண்பர், உன்னிகிருஷ்ணன், 40, சம்பவத்தன்று குடிபோதையில் ஏற்பட்ட தகராறில், சாமி, உன்னிகிருஷ்ணனை அரிவாளால் வெட்டியுள்ளார். பலத்த காயமடைந்த உன்னிகிருஷ்ணன் சம்பவ இடத்தில் பலியானார். சோலூர் மட்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து, சாமியை கைது செய்தனர். வழக்கு ஊட்டி மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. இவ்வழக்கில், சாமிக்கு ஆயுள் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி அருணாச்சலம் தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வக்கீல் மாலினி ஆஜரானார்.
06. தமிழகம் முழுவதும் எலைட் மதுபார்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். திருப்பூர் வளர்மதி பஸ் ஸ்டாப் அருகே 'எலைட்' டாஸ்மாக் மதுக்கடை செயல்பட்டு வருகிறது.. இக்கடையில், திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நேற்று இரவு திடீரென சோதனை மேற்கொண்டனர்..இரவு, 2:00 மணி வரை நடந்த சோதனையில், விற்பனையாளர்களிடம் இருந்து கணக்கில் வராத, 50 ஆயிரத்து, 520 ரூபாயை பறிமுதல் செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE