பொது செய்தி

தமிழ்நாடு

சென்னை ஐஐடி.,யில் கொரோனா பரவல்; காரணம் என்ன?

Updated : டிச 16, 2020 | Added : டிச 16, 2020 | கருத்துகள் (12)
Share
Advertisement
சென்னை: சென்னை, கிண்டியில் உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனமான ஐ.ஐ.டி., செயல்படுகிறது. இங்கு 13 மாணவர்கள் விடுதி மற்றும் ஒரு விருந்தினர்கள் மாளிகை உள்ளது. இங்கு, ஒரு சில மாணவர்களுக்கு கொரோனா உறுதியானதை தொடர்ந்து, அவர்களுடன் தொடர்பில் இருந்த மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் என அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் பலருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ChennaiIIT, CoronaVirus, Hotspot, Reason, சென்னை, ஐஐடி, கொரோனா, வைரஸ், பரவல், காரணம், தவறு

சென்னை: சென்னை, கிண்டியில் உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனமான ஐ.ஐ.டி., செயல்படுகிறது. இங்கு 13 மாணவர்கள் விடுதி மற்றும் ஒரு விருந்தினர்கள் மாளிகை உள்ளது. இங்கு, ஒரு சில மாணவர்களுக்கு கொரோனா உறுதியானதை தொடர்ந்து, அவர்களுடன் தொடர்பில் இருந்த மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் என அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் பலருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 191 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கொரோனா பாதிப்புக்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது.

சென்னை ஐஐடி.,யின் தகவலின்படி, கடந்த டிச.,1ம் தேதி இரண்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அடுத்த 15 நாளில் 19 சதவீதம் அளவிற்கு பாதிப்பு அதிகரித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் மத்திய அரசு ஊரடங்கை அமல்படுத்தியபோது 335 மாணவர்கள் மட்டும் விடுதிகளில் தங்கிப் படித்தனர். பின்னர், போக்குவரத்து தொடங்கப்பட்டதும் சில மாணவர்கள் வீடுகளுக்கு சென்றதால், அந்த எண்ணிக்கை 180 ஆக குறைந்தது.


latest tamil news


அந்த காலக்கட்டத்தில், ஏதேனும் மாணவரிடம் கொரோனா தொற்று கண்டறியப்பட்டால், ஐஐடி வளாகம், விடுதி என அனைத்து இடங்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, மாணவர்களை தனிமைப்படுத்தியுள்ளனர். ஆனால், டிச., மாதத்தில் இருவருக்கு பாதிப்பு உறுதியானபோது, அவ்வாறு கிருமி நாசினியும் தெளிக்கவில்லை, மாணவர்களை தனிமைப்படுத்தவும் இல்லை என கூறப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல், 180 மாணவர்களுக்கும் ஒரே உணவுவிடுதியில் மட்டுமே உணவு வழங்கப்பட்டுள்ளது. ஐஐடி மீண்டும் திறந்ததும், விடுதி மாணவர்களின் எண்ணிக்கை 774 ஆக அதிகரித்தாலும், ஒரே உணவுவிடுதியிலேயே அனைவரும் சாப்பிட்டுள்ளனர். இதனால், கூட்ட நெரிசல் ஒருபக்கம் இருந்தாலும், அங்குள்ள ஊழியர்கள் அனைவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவே மாணவர்களிடமும் கொரோனா பரவ முக்கிய காரணமாக அமைந்தது.


latest tamil news


'கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்ட சில மாணவர்கள் பரிசோதனைக்காக மாதிரிகள் வழங்கிய நிலையிலும், அனைவரும் பயன்படுத்தும் உணவுவிடுதி, கழிவறை போன்ற இடங்களை எல்லாம் அறிகுறி உள்ளவர்களும் பயன்படுத்தினர்,' என முதுகலை மாணவர் ஒருவர் கூறினார்.

ஆராய்ச்சி மாணவர் ஒருவர் கூறியதாவது: டிச.,9ம் தேதி சில மாணவர்களுக்கு அறிகுறிகள் தென்பட்டதால், விந்தியா என்னும் உணவு விடுதியும் திறக்கப்பட்டது. நவம்பர் வரையில் வீட்டில் இருந்து விடுதிக்கு வரும் மாணவர்கள் தரமணியில் உள்ள விருந்தினர் மாளிகையில் 2 வாரங்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். ஆனால், தீபாவளிக்கு பிறகு தனிமைப்படுத்தல் காலம் ஒரு வாரமாக குறைக்கப்பட்டதுடன், அவர்களை கண்காணிப்பதும் கடுமையாக்கப்படவில்லை. அவர்கள், தங்களின் நண்பர்களின் பொருட்களை தினமும் உபயோகித்துக்கொண்டு தான் இருந்தனர். இவ்வாறு அவர் கூறினார்.


latest tamil newsஇதன்மூலம் கொரோனா விதிமுறைகளை சரியாக பின்பற்றாமல் அலட்சியமாக இருந்ததே ஐஐடி.,யில் கொரோனா பரவியதற்கான காரணமாக கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், 'இனிமேல், கொரோனா தடுப்பு நடைமுறைகளை பின்பற்றுமாறு கெஞ்ச மாட்டோம். விதிகள் மீறப்பட்டால் தொற்றுநோய்கள் சட்டம் மற்றும் தமிழக பொது சுகாதாரச் சட்டத்தின் கீழ் நாங்கள் நடவடிக்கை எடுப்போம். தனிநபராக இருந்தாலும், நிறுவனமாக இருந்தாலும் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்,' எனக் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dr.subbanarasu Divakaran - bengaluru,இந்தியா
17-டிச-202000:18:18 IST Report Abuse
Dr.subbanarasu Divakaran இந்த மாதிரி நோயை பரவ விட்டதற்கு மதராஸ் ஐஐ டி அதிகாரிகளை தண்டிக்க வேண்டும். சின்னம் சிறிய பள்ளிகளில் கூட சுகாதார முறைகள் இருக்கும்போது இந்த மாதிரி நோயை பரவ வீடுவது கொலைக்கு சமம்.
Rate this:
Cancel
Janarthanan (குடும்ப ஆட்சிக்கு முடிவுரை எழுத வேண்டும்) @ தமிழன் - Chennai,சவுதி அரேபியா முதல் பெருமையை யாரும் பறிக்க முடியாது ???
Rate this:
Cancel
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
16-டிச-202021:11:24 IST Report Abuse
Tamilan என்ன நடந்தாலும் அதற்க்கு ஒரு காரணம் இருக்கும் . அதுதான் முழு காரணமா ?. விமானங்களில் இருப்பதைப்போல் வேலையாட்களை பட்டம் படித்திருந்தவர்களை வைத்திருந்தால் இதெல்லாம் நடந்திருக்காதா ?. எல்லாம் தெரிந்திருந்தும் ஏன் அப்படி செயதார்கள்? இப்படி பாதிக்கப்பட்ட மக்களை சமூகத்திலிருந்தே ஒதுக்கி வைக்க வேண்டும் என்று கூறுவது தீண்டாமைக்கு எதிரான அரசியல் சட்டத்திற்கு எதிரானது இல்லையா? கூறுவது மட்டுமல்ல, உலகமெல்லாம் ஒதுக்கி வைப்பதும், ஒருவரையொருவர் தீண்டாமல் இருப்பதும் வருடமெல்லாம் இருப்பதும் அரசியல் சட்டத்தை குழி தோண்டி புதைப்பதற்கு சமம் இல்லையா ?.
Rate this:
கொக்கி குமாரு - கோபால்புரம் தட்டை, உலகம் உருண்டை,,கோகாஸ் கில்லிங் இஸ்.
16-டிச-202021:19:53 IST Report Abuse
கொக்கி குமாரு தீண்டாமைக்கும்,கொரோனா தனிமைப்படுத்துதலுக்கும் என்ன சம்பந்தம்? வாழை பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல, அரசியல் குருமா திருமா போன்று இதில் அரசியலை கலக்க வேண்டாம்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X