பொது செய்தி

தமிழ்நாடு

சிறைத்துறை டிஐஜி வீட்டில் லஞ்ச ஒழிப்புப்பிரிவு போலீசார் சோதனை

Added : டிச 16, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
வேலூர்: வேலூர் சிறைத்துறை டிஐஜி ஜெயபாரதி வீட்டில் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீசார் சோதனை நடத்தினர்.வேலூர்மாவட்டம், தொரப்பாடியில் சிறைக்காவலர்கள் பயிற்சி மைய வளாகத்தில் சிறைத்துறையின் வேலூர் சரக டி.ஐ.ஜி ஜெயபாரதி வசித்து வருகிறார். இவரது கணவர் முருகன், சென்னையில் அரசு மதுபான மாவட்ட மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்றிரவு லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில்

வேலூர்: வேலூர் சிறைத்துறை டிஐஜி ஜெயபாரதி வீட்டில் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீசார் சோதனை நடத்தினர்.

வேலூர்மாவட்டம், தொரப்பாடியில் சிறைக்காவலர்கள் பயிற்சி மைய வளாகத்தில் சிறைத்துறையின் வேலூர் சரக டி.ஐ.ஜி ஜெயபாரதி வசித்து வருகிறார். இவரது கணவர் முருகன், சென்னையில் அரசு மதுபான மாவட்ட மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்றிரவு லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவரது மனைவியான டி.ஐ.ஜி ஜெயபாரதி வசிக்கும் வீட்டிலும் வேலூர் லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி ஹேமசித்திரா தலைமையில் 7 பேர் கொண்ட குழுவினர் தொடர்ந்து வீட்டில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

வளாகத்தில் செய்தியாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்டதன் விவரங்கள் பின்னர் தான் தெரியவரும் எனக் கூறப்படுகிறது. சிறைத்துறை டி.ஐ.ஜி வீட்டில் லஞ்சஒழிப்புதுறை நடத்திய சோதனையால் அந்த பகுதியில் பரபரப்பு காணப்படுகிறது

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Indhuindian - Chennai,இந்தியா
16-டிச-202018:21:07 IST Report Abuse
Indhuindian ஒன்னும் பெரிய வித்தியாசம் இல்லேய் இத்தனை நாளா ஜெயில்லே தனி ரூம்லே ஹாயா கால்மேல் கால்போட்டு சில்லறையை தேத்திகிட்டு இருந்தாரு. இப்போ என்ன அதே ஜெயில்தான் தனி ரூம்தான் ஆனா ஒன்னு கால் மேலே கால் போட்டு சில்லறையை தேத்த முடியாது . மணி அடிச்சா சோறு முடி வளைந்தா மொட்டை அவ்வளோதான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X