வேலூர்: வேலூர் சிறைத்துறை டிஐஜி ஜெயபாரதி வீட்டில் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீசார் சோதனை நடத்தினர்.
வேலூர்மாவட்டம், தொரப்பாடியில் சிறைக்காவலர்கள் பயிற்சி மைய வளாகத்தில் சிறைத்துறையின் வேலூர் சரக டி.ஐ.ஜி ஜெயபாரதி வசித்து வருகிறார். இவரது கணவர் முருகன், சென்னையில் அரசு மதுபான மாவட்ட மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்றிரவு லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவரது மனைவியான டி.ஐ.ஜி ஜெயபாரதி வசிக்கும் வீட்டிலும் வேலூர் லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி ஹேமசித்திரா தலைமையில் 7 பேர் கொண்ட குழுவினர் தொடர்ந்து வீட்டில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
வளாகத்தில் செய்தியாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்டதன் விவரங்கள் பின்னர் தான் தெரியவரும் எனக் கூறப்படுகிறது. சிறைத்துறை டி.ஐ.ஜி வீட்டில் லஞ்சஒழிப்புதுறை நடத்திய சோதனையால் அந்த பகுதியில் பரபரப்பு காணப்படுகிறது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE