எல்லாம் கடந்து போகும்
தாவீது ராஜாவிடம் ஒரு பொற் கொல்லர், ''ராஜாவே! ஏதாவது நகை செய்ய வேண்டுமா?'' எனக் கேட்டார்.அவரைக் கண்டு எரிச்சல்பட்ட அவர், ''ஆமாம்... எனக்கு ஒரு மோதிரம் செய். ஆனால் ஒரு நிபந்தனை... நான் துக்கத்தில் இருக்கும் போது அதைப் பார்த்தால் மகிழ்ச்சி வர வேண்டும். மகிழ்ச்சியோடு இருக்கும் போது பார்த்தால் துக்கப்பட வேண்டும். அந்த மாதிரி மோதிரம் விசேஷமானதாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் உன் தலையை துண்டிப்பேன்'' என்று சொல்லி நெருக்கடியை ஏற்படுத்தினார்.
இப்படி ஒரு மோதிரம் எப்படி செய்வது என புலம்பினார் பொற்கொல்லர். இதைக்கண்ட சிறுவன் சாலமோன், ''பொற்கொல்லரே... இதற்காகவா அழுகிறீர்கள்! சாதாரண ஒரு மோதிரம் செய்யுங்கள். அதில் ''எல்லாம் கடந்து போகும்'' என்ற வாசகம் இடம் பெறட்டும். உங்களின் பிரச்னை முடிந்தது.'' என்றான்.பொற்கொல்லரும் அதே போல செய்து கொடுத்தார். ''ஆஹா... அருமை!'' என்று பொற்கொல்லரை தழுவினார் தாவீது ராஜா. மனதில் இருந்த துக்கம் நீங்கி சந்தோஷம் அடைந்தார்.
''இனி நீ அழுது கொண்டிராய். உன் கூப்பிடுதலின் சத்தத்திற்கு அவர் உருக்கமாய் இரங்கி அதை உடனே உனக்கு மறுஉத்தரவு அருளுவார்'' என்ற வசனத்தை மறக்காதீர்கள்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE