அறிவியல் ஆயிரம்
முக்கோண பற்கள்
முதுகெலும்பற்றவைகளில், வளைதசைப்புழுக்கள் தொகுதியில் இடம்பெற்றுள்ளது. அட்டை. இதற்கான முக்கிய உணவு, முதுகெலும்புள்ள உயிரினத்தின் ரத்தம்.அட்டை 3 செ.மீ., முதல் 30 செ.மீ., வரை வளர கூடியது. வாய்ப்பக்க உறிஞ்சியில் முக்கோணவடிவில் மூன்று பற்கள் உள்ளன. பிற உயிர்களின் மீது உறிஞ்சியால் ஒட்டிக்கொண்டு, பற்கள் மூலம் ரத்தத்தை உறிய துவங்கும்.வெளிப்படும் ரத்தம் உறையாமல் இருக்க, ஹைருடின் திரவத்தை சுரக்கின்றன. மனிதரின் கால் பகுதியை பிடித்துக்கொண்டால், தீக்குச்சி உரசி அதன் மீது வைத்தால் மட்டுமே அட்டையை பிரிக்க முடியும்.
தகவல் சுரங்கம்
உறையும் நதி
காஷ்மீரில் உள்ள புகழ்பெற்ற தால் ஏரி, பனிக்காலத்தில் முற்றிலும் உறைந்து விடும். விரைந்து பாயும் நதியே, கடுங்குளிரினால் உறைந்து போவதை ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் பார்க்கலாம். இந்த மாஸ்கோ நதி, மாஸ்கோ நகருக்குள் 42 கி.மீ., ஓடுகிறது. 42 கி.மீ., துாரமும் மண்ணில் ஓடாமல் சிமென்ட்டால் ஆன வாய்க்காலில் ஓடுகிறது. இதில் படகு போக்குவரத்து நடைபெறுகிறது. கோடைகாலத்தில் விரைந்து ஓடும் இந்நதி, பனிக்காலத்தில் முழுமையாக உறைந்து விடுகிறது. பனிக்காலத்தில் இந்நதியின் மீது சுற்றுலாப் பயணிகள் நடந்து செல்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE