புதுடில்லி: கடந்த 2012ம் ஆண்டு நாட்டையே உலுக்கிய நிர்பயா சம்பவத்தின் எட்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று (16ம் தேதி ) அனுசரிக்கப்படுகிறது.
![]()
|
கடந்த 2012ம் ஆண்டு டிச. 16ம் தேதி தலைநகர் டில்லியில் மருத்துவ மாணவி, 'நிர்பயா' தன் ஆண் நண்பருடன் இரவில், தனியார் பஸ்சில் பயணம் செய்த போது, ஆறு பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, பஸ்சில் இருந்து துாக்கி வீசப்பட்டார்; நண்பரும் தாக்கப்பட்டார். டில்லி சஃப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நீதிபதியிடம் வாக்குமூலம் அளித்தார்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டடு சிகிச்சை பலனின்றி டிச.,29ம் தேதி உயிரிழந்தார். இச்சம்பவம் தலைநகர் டில்லியை மட்டுமல்லாது நாடு முழுவதும்பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் தொடர்பாக முகேஷ் குமார், , பவன் குப்தா,, வினய் சர்மா,, அக் ஷய் குமார் சிங், ,உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் குற்றவாளிகளில் ஒருவர், 'மைனராக' இருந்ததால், அவர் சிறுவர் சீர்திருத்த பள்ளியில், மூன்று ஆண்டுகள் அடைக்கப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டார்.
மீதமுள்ள ஐந்து பேருக்கு, துாக்கு தண்டனை விதித்து விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டது. இதில், ராம் சிங் என்ற குற்றவாளி, டில்லி திஹார் சிறையில் தற்கொலை செய்துகொண்டார். இந்நிலையில், மீதமுள்ள முகேஷ் குமார் சிங்(32), வினய் சர்மா(26), பவன் குப்தா(25), அக்ஷய் குமார் சிங்(31) ஆகிய நான்கு பேருக்கும் துாக்கு தண்டனை விதிக்கப்பட்டது. விரைவு நீதிமன்றம், டெல்லி உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என 7 ஆண்டுகளாக பல்வேறு கட்ட போராட்டங்களுக்கு பின்னர் 2020 ம் ஆண்டு மார்ச் மாதம் 20ம் தேதி தூக்கிலிடப்பட்டனர்.
![]()
|
இந்நிலையில் நிர்பயா சம்பவத்தின் எட்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று (16ம்தேதி) அனுசரிக்கப்படுகிறது. நிர்பயா சம்பவத்தின் எதிரொலியாக நாட்டின் பாலியல் குற்றங்கள் குறித்து விசாரிப்பதற்கான விரைவு நீதிமன்றங்களை அமைக்க பார்லி.,முடிவெடுத்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE