பொது செய்தி

தமிழ்நாடு

ரேஷன் கார்டு வாங்கும் நடைமுறை தெரியாமல் தவிக்கும் இருளர்கள்

Added : டிச 16, 2020
Share
Advertisement
காஞ்சிபுரம் : ரேஷன் கார்டு எவ்வாறு வாங்குவது என தெரியாததால், அரசின் நிவாரணம் மற்றும் நலத்திட்ட உதவி பெற முடியாமல், செவிலிமேடு இருளர்கள் பரிதவிக்கின்றனர். காஞ்சிபுரம், செவிலிமேடு ஏரிக்கரையில் வசிக்கும் இருளர்கள், ரேஷன், ஆதார் கார்டு போன்றவை இல்லாமல், அரசு வழங்கும் இலவச நிவாரணங்கள் மற்றும் ரேஷன் பொருட்கள் பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.இதேபோல், ஓரிக்கை மற்றும்

காஞ்சிபுரம் : ரேஷன் கார்டு எவ்வாறு வாங்குவது என தெரியாததால், அரசின் நிவாரணம் மற்றும் நலத்திட்ட உதவி பெற முடியாமல், செவிலிமேடு இருளர்கள் பரிதவிக்கின்றனர்.

காஞ்சிபுரம், செவிலிமேடு ஏரிக்கரையில் வசிக்கும் இருளர்கள், ரேஷன், ஆதார் கார்டு போன்றவை இல்லாமல், அரசு வழங்கும் இலவச நிவாரணங்கள் மற்றும் ரேஷன் பொருட்கள் பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.இதேபோல், ஓரிக்கை மற்றும் பிற பகுதிகளில் வசிக்கும் இருளர் இன மக்கள் பலர், ரேஷன் கார்டு இல்லாததால், ரேஷன் உணவு பொருட்கள் பெற முடியாமல் உள்ளனர்.இது குறித்து, செவிலிமேடில் வசிக்கும் இருளர் தருமன் கூறியதாவது: செவிலிமேடு ஏரிக்கரையில், 10 குடும்பங்கள் வசிக்கிறோம்.

எங்களுக்கு படிப்பறிவு கிடையாது. இதனால், ரேஷன் கார்டு, ஆதார் கார்டை, எப்படி வாங்குவது என்ற வழிமுறை தெரியவில்லை.கொரோனா காலத்தில், வேலை இல்லாமல், குழந்தைகளுடன் மிகவும் கஷ்டப்பட்டோம். எங்கள் நிலைமை தெரிந்து, காவல் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் உணவுப் பொருட்கள் வழங்கின.மழைக்காலத்தில், குழந்தைகளுடன், குடிசை வீட்டில் வசிக்கிறோம். மிகவும் சிரமமாக இருக்கிறது.எனவே, தொகுப்பு வீடு வழங்கவும், குடும்பத்திற்கு உணவு பொருட்கள் வாங்க, ரேஷன் கார்டு கிடைக்கவும், மாவட்ட நிர்வாகம் உதவி செய்ய வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X