கும்மிடிப்பூண்டி : தேசிய நெடுஞ்சாலையோரம், மணல் குவியல் பரவி கிடப்பதால், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் கடந்து செல்கின்றனர்.
சுங்க கட்டணம் வசூலிக்கப்படும், சென்னை -- கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், முறையான பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதில்லை என, வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.சாலை ஓரத்தில், புதர்களும், மணல் திட்டுகளும் ஆங்காங்கே காணப்படுகின்றன. பல இடங்களில் உள்ள சாலையோர மணல் குவியல்களால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.குறிப்பாக, சாலையின் இடது ஓரம் செல்ல வேண்டிய இருசக்கர வாகனங்கள், மணல் குவியலில் சிக்கி விபத்து ஏற்படும் நிலை உள்ளது.
சென்னை -- கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முறையான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE